மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் கையில் இருக்கக்கூடிய பல்வேறு ஆயுதங்களில் முக்கியமானது ஸ்ரீ சக்கரம். மகாவிஷ்ணுவின் வலது கையில் இருக்கும் இந்த சக்கரம் பகைவரை அழிக்கும் ஆயுதமாகும். ஆனி மாதத்தில் வரக்கூடிய சித்திரை நட்சத்திரத்தில் சக்கரதாழ்வார் ஜெயந்தி திருநாள் ஆகும். இருப்பினும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சித்திரை நட்சத்திரத்தின் போது சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அதோடு வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை மிகவும் விசேஷ தினமாகும். விஷ்ணுவுக்கு சக்கரத்தை வரமாக அளித்த சிவன் பெருமான் : சிவபெருமானை […]
Category: பொது தகவல்கள்
மகா சிவராத்திரி: சிவ ஆலயங்களில் நான்கு கால பூஜைகள் மற்றும் அதன் பலன்கள்
மகா சிவராத்திரி அன்று 4 கால பூஜை என்பது விசேஷம். அந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும். சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்றால் சகல தோஷங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, […]
கார்த்திகை தீப திருநாள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் 2668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு இந்த ஆண்டு தீப திருவிழாவை நேரடியாக காண தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் நேரலைகளில் ஒளிபரப்பான காட்சிகளைக் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் […]
துர்க்கையின் 9 வடிவங்கள்: நவதுர்க்கை வடிவமும், சிறப்பம்சமும்
துர்க்கையின் ஒன்பது உருவங்கள் முதல் நாளில் அன்னை மகேஸ்வரி ரூபம் இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபம் மூன்றாம் நாள் வராகி அம்மன் ரூபம் நான்காம் நாள் மகாலட்சுமி தோற்றம் ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ரூபம் ஆறாம் நாள் இந்திராணியாக காட்சி தருவாள் ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள்வாள் எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபம் ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் அக்., 25 (ஞா) சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்லநேரம் காலை 7.31 – 9.00 மணி) அக்., […]
நவராத்திரி 2020 : ஏன் இந்தாண்டு ஒரு மாதம் தாமதமாக நவராத்திரி கொலு கொண்டாடப்படுகிறது?
மகாளய அமாவாசையை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்த நவராத்திரி கொண்டாட்டம், இந்தாண்டு ஒரு மாதம் தாமதமாக கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதற்கான காரணமும், தேவியின் 9 ரூபங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்… இரண்டு வாரங்கள் நீடிக்கக் கூடிய பித்ரு பட்சம் எனும் மகாளயபட்சம் செப்டம்பர் 2ம் தேதி தொங்கி செப்டம்பர் 17ம் தேதி முடிவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும், மகாளய அமாவாசை முடிந்தவுடன் துர்க்கை அம்மனை வழிபடக்கூடிய நவராத்திரி பூஜை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதம் கழித்து […]
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?
பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பது வழக்கம். இந்த விரதத்தை முறையாக இருந்தால் நாம் பல பலன்களை அடையலாம். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம். புரட்டாசி சனி விரதம் இருப்பது எப்படி புரட்டாசி சனிக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலமிட்டு பின் குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையின் இருபக்கமும் குத்து விளக்கேற்ற வேண்டும். பின் அலங்கார பிரியரான வேங்கடேசப் பெருமாள் அலர்மேல்மங்கை தாயாருடன் இருக்கும் படத்தை […]
கிருஷ்ண ஜெயந்தி
இந்த உலகத்தை காத்து ரட்சிக்கின்ற பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். அதோடு மகாபாரத போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை எனும் அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடா தயாராவோம். கிருஷ்ணர் பிறந்த கதை : கம்சன் எனும் […]
வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல்; கலசத்தில் காசுகள்… செல்வ கடாக்ஷம் பெருகும்
வரலக்ஷ்மி பூஜையில், கலசத்துக்குள் வைக்கப்படும் நாணயங்களும் அதைக் கொண்டு செய்யப்படும் பூஜைகளும் சக்தி வாய்ந்தவை. கடனில் மூழ்கி தத்தளிக்கும் குடும்பங்களைக் கரை சேர்த்து அருளுவாள் மகாலக்ஷ்மி. உலகம் முழுதுமாக சக்தி வியாபித்திருக்கும் மாதம் ஆடி மாதம். சக்தி என்று போற்றப்படுகிற பராசக்தி உள்ளிட்ட பெண் தெய்வங்களைக் கொண்டாடுவதற்கான, வணங்குவதற்கான, அற்புதமான மாதம். ஆடிப்பூரம், ஆடித் தபசு முதலான விழாக்களும் ஆடி மாதத்தின் முக்கிய பண்டிகைகள். ஆடிப்பெருக்கு எனும் வைபவமும் நீர் நிலை வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதேபோல், […]
வரலக்ஷ்மி விரத பூஜைகள் மற்றும் புனஸ்காரம்
வரமஹலட்சுமி விரதம் (சம்மந்தமான) என்பது இந்து மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் மனைவியான லட்சுமி தேவியை முன்னிலைப்படுத்தும் ஒரு திருவிழா ஆகும். வராலட்சுமி வரங்களை வழங்குபவர் (“வரா”). இது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் பல பெண்கள் நிகழ்த்திய முக்கியமான பூஜை. ‘வரா மஹாலட்சுமி விரதம் என்ற பெயரில் சொல்லப்படும் இந்து திருவிழா, இரண்டாம் வெள்ளி அல்லது பௌர்ணமி நாளுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை – பூர்ணிமா – ஷ்ரவணா மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இது […]
முழுநிலவு தரிசனம் மொட்டைமாடியில்! சித்ரா பெளர்ணமி வழிபாடு
சித்ரா பெளர்ணமியில் காலையிலும் மாலையில் பூஜைகள் செய்து வணங்குங்கள். மாலையில், வீட்டு வாசல இரண்டு அகல் விளக்கு ஏற்றி வையுங்கள். 7.5.2020 வியாழக்கிழமை சித்ரா பெளர்ணமி. சித்ரா பெளர்ணமி நன்னாளில், வீட்டில் பூஜைகள் மேற்கொள்ளவேண்டும். காலையும் மாலையும் மறக்காமல் பூஜை செய்து வழிபடுங்கள். மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபடுவது குடும்பத்துக்கு நன்மைகள் பலவற்றையும் வழங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம். அதேபோல், கடற்கரைப் பகுதி, ஆற்றங்கரை, குளக்கரை ஆகிய இடங்களில், மாலையில் வீட்டில் […]