கிருஷ்ண ஜெயந்தி
இந்த உலகத்தை காத்து ரட்சிக்கின்ற பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர்.
ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். அதோடு மகாபாரத போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை எனும் அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடா தயாராவோம்.
கிருஷ்ணர் பிறந்த கதை :
கம்சன் எனும் அரக்கன் தனது தங்கைக்கு பிறக்கும் 8வது குழந்தையின் கையால் கொல்லப்படுவான் என்பதை அசரீரியின் மூலம் அறிந்து தங்கை என்றும் பாராமல் தேவகி வசுதேவரைச் சிறையில் அடைத்தான். தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைகளை கொன்று வந்த கம்சனிடமிருந்து, எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ணரை காப்பாற்ற யமுனை நதியைக் கடந்து வசுதேவர் கிருஷ்ணரை கோகுலத்தில் வாழ்ந்து வந்த யாதவ குலத்தை சேர்ந்த நந்தகோபர் – யசோதையிடம் சேர்த்தார்.
கோகுலத்தில் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக வளர்ந்த கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்தார். வளர்ந்து இளைஞன் ஆனதும் கம்சனை அழித்தார். பின்னர் மகாபாரத போர் என கிருஷ்ணரின் லீலைகள் நீண்டு கொண்டே செல்கிறது.
கிருஷ்ண ஜெயந்தி பூஜை வீட்டில் எப்படி செய்வது, விரதம் இருப்பது எப்படி தெரியுமா?
கிருஷ்ண ஜெயந்தி 2020 எப்போது?
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய் பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது
அந்த வகையில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி தமிழகத்திலும், வட இந்தியாவில் 12ம் தேதியும் கிருஷ்ண ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 11 அதாவது ஆடி 27ம் தேதி காலை 7.55 மணிக்கு அஷ்டமி திதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி காலை 9.36 மணி வரை உள்ளது.
கிருஷ்ணர் அவதரித்ததாக அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 11ம் தேதி தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே சமயம், கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை புனஸ்காரம் செய்யப்படுவது வழக்கம்.
கிருஷ்ணனுக்கு உகந்த இந்த மந்திரங்களை சொன்னால் சகலமும் நன்மை தான்!
அதே போல் குசேலனின் அன்பை அவர் கொண்டு வந்த அவல் மூலம் வெளிப்படுத்தினார். அதனால் எந்த ஒரு பலகாரத்தையும் செய்ய முடியவில்லை என்ற நிலை இருப்பவர்கள் கலங்காமல் பூஜையில் அவல், வெண்ணெய் வைத்தாலே கிருஷ்ண பரமாத்மா மனதார ஏற்றுக் கொள்வார்.
கிருஷ்ணருக்கு பிடித்த அவல்:
எந்த பலகாரம் வைத்து சாமி கும்பிட முடியாவிட்டாலும் எளிமையாக வெண்ணெயும், அவலும் படைத்து வணங்க மனதார ஏற்றுக்கொண்டு செல்வ வளத்தை அள்ளித்தருவார் பகவான் கிருஷ்ணர்.
கிருஷ்ண லீலை, ஸ்ரீபாகவத புராணம் படிக்கலாம். கிருஷ்ண மந்திரம் படித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்து வணங்கினால் சந்தான யோகம், புத்திர பாக்கியம் கிடைக்கும். நம் வீட்டில் உள்ள குழந்தைகள் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று ஸ்ரீமத் பாகவதமும், விரத சூடாமணியும் கூறியுள்ளது.
பூஜைகள் செய்ய நல்ல நேரம்
சின்னக் கண்ணனை வீட்டிற்கு அழைக்க காலை மாலை என எந்த நேரமும் நல்ல நேரம்தான். ராகு காலம், எம கண்டம் நேரம் தவிர எந்த நேரத்திலும் வணங்கலாம்.