ஸ்ரீ பிரணவ ஜோதிடாலயம்

வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல்; கலசத்தில் காசுகள்… செல்வ கடாக்ஷம் பெருகும்

வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல்; கலசத்தில் காசுகள்… செல்வ கடாக்ஷம் பெருகும்

வரலக்ஷ்மி பூஜையில், கலசத்துக்குள் வைக்கப்படும் நாணயங்களும் அதைக் கொண்டு செய்யப்படும் பூஜைகளும் சக்தி வாய்ந்தவை. கடனில் மூழ்கி தத்தளிக்கும் குடும்பங்களைக் கரை சேர்த்து அருளுவாள் மகாலக்ஷ்மி. உலகம் முழுதுமாக சக்தி வியாபித்திருக்கும் மாதம் ஆடி மாதம். சக்தி என்று போற்றப்படுகிற பராசக்தி உள்ளிட்ட பெண் தெய்வங்களைக் கொண்டாடுவதற்கான, வணங்குவதற்கான, அற்புதமான மாதம். ஆடிப்பூரம், ஆடித் தபசு முதலான விழாக்களும் ஆடி மாதத்தின் முக்கிய பண்டிகைகள். ஆடிப்பெருக்கு எனும் வைபவமும் நீர் நிலை வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதேபோல், […]

வரலக்ஷ்மி விரத பூஜைகள் மற்றும் புனஸ்காரம்

வரலக்ஷ்மி விரத பூஜைகள் மற்றும் புனஸ்காரம்

வரமஹலட்சுமி விரதம் (சம்மந்தமான) என்பது இந்து மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் மனைவியான லட்சுமி தேவியை முன்னிலைப்படுத்தும் ஒரு திருவிழா ஆகும். வராலட்சுமி வரங்களை வழங்குபவர் (“வரா”). இது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் பல பெண்கள் நிகழ்த்திய முக்கியமான பூஜை. ‘வரா மஹாலட்சுமி விரதம் என்ற பெயரில் சொல்லப்படும் இந்து திருவிழா, இரண்டாம் வெள்ளி அல்லது பௌர்ணமி நாளுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை – பூர்ணிமா – ஷ்ரவணா மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இது […]

சூரிய கிரகணத்தால் பாதிக்கப் போகும் ராசி, நட்சத்திரங்கள் எது? பாதிக்காமல் இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

சூரிய கிரகணத்தால் பாதிக்கப் போகும் ராசி, நட்சத்திரங்கள் எது? பாதிக்காமல் இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

இந்த கிரகணத்தின் போது, சூரியன் மிதுன ராசியில் இருக்கின்றார். ஆகவே, மிதுன ராசிக்காரர்கள் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் திருவாதிரை, மிருகசிரிஷம் இந்த இரண்டு நட்சத்திரகாரர்களுக்கும் கிரகதோஷம் உள்ளது. இதனால், உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தால் திருவாதிரை, மிருகசீரிஷம் நட்சத்திரம் கொண்டவர்கள் உங்களது ஜாதகத்தை, கொண்டுபோய், உங்கள் குடும்ப ஜோசியரிடம் காட்டி உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. தோஷம் தாக்காமல் […]

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்

வரும் 21 – 06 – 2020, ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணம். சூரியன், சந்திரன், பூமி 🌞🌝🌎 ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனின் ஒளியை சந்திரன் சிறிது நேரம் மறைக்கும், அந்த நேரத்தில் சூரிய ஒளி பூமியில் மங்கும் இதுவே சூரிய கிரகணம். இது, 21.06.2020, ஞாயிற்றுக்கிழமை காலை 10.23 தொடங்கி, மதியம் 12.00 மணிக்கு உச்சம் ஆகி, 1.45 முடிகிறது. சூரிய ஒளி பூமியில் படாத அந்த நேரங்களில் பூமியில் தீய அலைகள் மேலெழும்பும், […]

முழுநிலவு தரிசனம் மொட்டைமாடியில்! சித்ரா பெளர்ணமி வழிபாடு

முழுநிலவு தரிசனம் மொட்டைமாடியில்! சித்ரா பெளர்ணமி வழிபாடு

சித்ரா பெளர்ணமியில் காலையிலும் மாலையில் பூஜைகள் செய்து வணங்குங்கள். மாலையில், வீட்டு வாசல இரண்டு அகல் விளக்கு ஏற்றி வையுங்கள். 7.5.2020 வியாழக்கிழமை சித்ரா பெளர்ணமி. சித்ரா பெளர்ணமி நன்னாளில், வீட்டில் பூஜைகள் மேற்கொள்ளவேண்டும். காலையும் மாலையும் மறக்காமல் பூஜை செய்து வழிபடுங்கள். மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபடுவது குடும்பத்துக்கு நன்மைகள் பலவற்றையும் வழங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம். அதேபோல், கடற்கரைப் பகுதி, ஆற்றங்கரை, குளக்கரை ஆகிய இடங்களில், மாலையில் வீட்டில் […]

சித்ரா பெளர்ணமி

சித்ரா பெளர்ணமி

சித்ரா பெளர்ணமியன்று (7.5.2020 வியாழக்கிழமை) சித்ரகுப்தனை மனதார வழிபடுங்கள். அவரை வேண்டிக்கொண்டு தான தருமங்கள் செய்தால், சித்ரகுப்தனின் அருள் கிடைக்கப்பெறலாம். எம பயம் விலகி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்! திருக்கயிலாயத்தில், பார்வதிதேவி, தோழியருடன் இருந்தாள். அப்போது பொற்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தாள். மிகவும் அழகாக இருந்த சித்திரம் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்று ஆவலுடன் பேசிக்கொண்டார்கள். அதன்படி பார்வதிதேவி தான் வரைந்த ஓவியத்துக்கு உயிர் கொடுத்தாள். அந்தச் சித்திரத்தில் இருந்து வெளிப்பட்டான் ஒருவன். அதனால்தான் […]

அட்சய திருதியையின் போது செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்

அட்சய திருதியையின் போது செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்

வருடப்பிறப்பு திதியாக இருந்தால், மதிக்கத்தக்க செயல்களான பாராயணம், தவம், கொடைகள், சடங்கு ரீதியான முழுக்கு, தியாகங்கள், வேள்விசெய்தல் ஆகியன மிகவும் நன்மையளிப்பதாகும். ஆனால் முப்புரிநூல் அணிதல், திருமணம், நோன்பு முடித்தல், வீடு கட்டுதல், புதுமனை புகுதல், கடும் உழைப்பு மற்றும் நடவு நடுதல் போன்ற செயல்களைத் தொடங்குவது/செய்வது சில சமூகங்களில் தடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பெரும்பாலானோர் உறவுகள், வாங்குதல் மற்றும் முடிவு செய்தவற்றை நிறைவேற்றுதல் போன்றவற்றைத் தொடங்குதல்/மீண்டும் தொடங்குதலுக்கு இதை மங்களகரமான நாளாகக் கருதுகின்றனர். சிலரைப் பொறுத்தவரை […]

அட்சய திருதியை

அட்சய திருதியை

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் […]

ஓம் பிரணவ மந்திரம்

ஓம் பிரணவ மந்திரம்

Om Pranava Mantra – ஒம்கார மந்திரமே ‘பிரணவ’ மந்திரம் ஓம்காரம், இதுவே பல மந்திரங்களில் முதலில் இடம்பெறும் சொல். இந்த மந்திரத்திற்கு பல கோடி அர்த்தங்கள் உண்டு என்று புரானங்களில் சொல்வதுண்டு. “ஓம்” சாந்தி சாந்தி என்றால் ‘நிசப்தமான ஓசை’ என்று பொருள். உபநிஷத்களில் ஓம்கார மந்திரமே முதன்மையான மந்திரம். இதுவே பிரம்மத்தை அடைய வழி. பிரம்மம் என்றால் எல்லாம். இது தான் பிரம்மம் என்று வரையருக்க முடியாது. கணித்தில் infinity என்று ஒன்று உண்டு. […]

உமா மகேஸ்வர விரதம்

உமா மகேஸ்வர விரதம்

நா                      : காத்திகை மாத பவுர்ணமி. தெய்வம்       : பார்வதி, பரமசிவன். விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக் கூடாது. பலன்               : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

error: Content is protected !!
Call Now