சூரிய கிரகணம்

வரும் 21 – 06 – 2020, ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணம்.

சூரியன், சந்திரன், பூமி 🌞🌝🌎 ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனின் ஒளியை சந்திரன் சிறிது நேரம் மறைக்கும், அந்த நேரத்தில் சூரிய ஒளி பூமியில் மங்கும் இதுவே சூரிய கிரகணம்.

இது, 21.06.2020, ஞாயிற்றுக்கிழமை காலை 10.23 தொடங்கி, மதியம் 12.00 மணிக்கு உச்சம் ஆகி, 1.45 முடிகிறது.

சூரிய ஒளி பூமியில் படாத அந்த நேரங்களில் பூமியில் தீய அலைகள் மேலெழும்பும், நச்சு வாயுக்களும், நுண் உயிர்களும் பரவும்…
(ஆனால் இது கொரோனாவை அச்சுறுத்தும் விஷேச கிரகணம்)

ஆகையாலே கிரகணம் போது எந்த செயலிலும் ஈடுபடாமல், உண்ணாமல், வெளியே செல்லாமல், கிரகணத்தை காணாமல் இருக்க வேண்டும், கட்டாயம்.

மேலும், உடல் மனம் ஆத்மா ஒரு நிலை அடைய இது ஏதுவாக இருக்கும்.

அன்று கடைப்பிடிக்க வேண்டிவை 🔥

🔯 அதற்கு முதல் நாள் 20 – சனிக்கிழமை அம்மாவாசை, அன்று இரவு இலேசான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்லது வெறும் பால் மற்றும் விதை இல்லா பழங்களை உட்கொள்ள வேண்டும்.

🔯 மறுநாள் அஃதாவது கிரகணம் அன்று எதுவுமே சாப்பிடாமல் இருப்பது சிறந்தது காலை உணவு மட்டுமாவது உண்ணாது இருந்து மதியம் கிரகணம் முடிந்த பிறகு உண்ணலாம்… குறைந்தபட்சம் நீர் நன்கு கொதிக்க வைத்து பிறகு ஆற லேசான சூட்டில் குடிக்கவும்.

🔯 அன்று காலையில் இருந்து கிரகணம் முடியும் வரை அவசியம் விளக்கு தீபம் எறிய வேண்டும், அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

🔯 வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது.

🔯 கிரகணம் முடிந்த பிறகு இந்து உப்பு அல்லது கல் உப்பு கைப்பிடி தண்ணீரில் கலந்து ஒவ்வொருவரும் குளிக்க வேண்டும்.

🔯 பிறகு மஞ்சள் மற்றும் எலுமிச்சை கலந்த தண்ணீரால் வீட்டை கழுவி அல்லது துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். பிறகே உண்ண வேண்டும்.

🌞 கிரகண தியானம்

🔯 கிரகண நேரம் குறைவான நேரமாக இருந்தாலும் மிக சக்தி வாய்ந்தது,

அப்போது கண்களை மூடி அமர்ந்து,
சிவமே பொருள்
சிவமே தவம்
என நீண்டு கூறி

இறை அருளாலே எல்லாம் உன் அருளுக்கு நன்றி

உன் தனி பெரும் கருணை யாலே எல்லாம்
உன் கருணைக்கு நன்றி
நன்றி நன்றி
என மனதார நன்றி கூறி

அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்துடன் தியானித்தால் பல மடங்கு நன்மைகள்…

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

error: Content is protected !!
Call Now