பைரவர் வழிபாட்டு முறைகளும் பலன்களும் !!

பைரவர் வழிபாடு பயம் போக்கும், திருமணம் யோகம் கைகூட வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.

குழந்தைபாக்கியம் பெற, தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்கள் சிவாலயங்களுக்குச் சென்று, பைரவ மூர்த்திக்கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இழந்த பொருள் – சொத்துகளைத் திரும்பப் பெற, பைரவர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து மனமுருகிப் பிரார்த்தித்து அர்ச்சனை செய்து வழிபட்டால், இழந்த பொருள் மற்றும் சொத்துகள் திரும்பக் கிடைக்கும்.

வறுமை நீங்க வெள்ளிக்கிழமை மாலை வேளையில், வில்வ இலைகள் மற்றும் வாசனை மலர்களால் பைரவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் வறுமை அகலும். நோய்கள் தீர, யமபயம் நீங்க ஞாயிற்று கிழமை ராகுகாலம், தேய்பிறை அஷ்டமி ஆகிய தினங்களில் பைரவருக்கு நடை பெறும் வழிபாடுகளில் கலந்துகொண்டு, பைரவருக்கு மஞ்சள் மற்றும் சந்தன அபிஷேகம் செய்து எலுமிச்சைமாலை அணிவித்து அர்ச்சனை செய்தால் நோய்கள் மறையும். யம பயம் நீங்கும்.

திருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா?

இவர் ஒரு சில சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். இவர் சனி பகவானின் குரு ஆவார். அந்த வகையில் இவரை சனிக் கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சனி தோஷம் தீரும். அதிலும், கால பைரவர், காலத்தை கட்டுப்படுத்தும் பைரவர் ஆவார்.

கால பைரவ வழிபாடு : தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். இந்தக் கால பைரவ விரதம் என்பது அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு வாய்ந்ததாகும். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த சமயத்தில், கால பைரவரின் மந்திரத்தை ஜபித்தால் என்பது நன்மை செய்யும்.

கால பைரவர் மந்திரம்:

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

“ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

இந்த மந்திரத்தை பக்தி சிரத்தையுடன், 27 முறை கூறி வழிபட வேண்டும்.

error: Content is protected !!
Call Now