13 ஏப்ரல் 2022 முதல் 21 ஏப்ரல் 2023 வரை குரு பகவான் மீன ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். ராசிச் சக்கரத்தில் மீனம் 12 வது ராசி ஆகும். மீன ராசியில் சஞ்சரிக்கும் குரு நல்ல பலன்களை வழங்குவார். உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தில் குரு ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும் கூட நீங்கள் நல்ல பலன்களைப் பெற இயலும். உங்கள் ஆரோக்கியம், செல்வம், கல்வி ஆகியவற்றில் மேன்மை கிட்டும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பெரும்பாலனவர்களுக்கு தங்கள் கல்வி மற்றும் வேலையில் வெற்றி கிட்டும்.
மீன ராசியில் குரு பகவான் ஜூலை 24 முதல் 28 நவம்பர் 2022 வரை வக்கிர கதியில் சஞ்சாரம் செய்தாலும் பெரும்பாலனவர்களுக்கு மங்களகரமான பலன்களை அளிக்கிறார். இந்தப் குரு பெயர்ச்சி 2022 மூலம் வளர்ச்சி, முன்னேற்றம் செழுமை மற்றும் வளமை கிட்டும். பெரும்பாலானவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

மீன ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் அந்த ராசியில் பூரட்டாதி, உத்திரட்டாதி, மற்றும் ரேவதி நடசத்திரங்களில் சஞ்சாரம் செய்கிறார். ஏப்ரல் -மே 2022 காலக்கட்டடத்தில் குரு தனது நட்சத்திரமாகிய பூரட்டாதி நடசத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார்.  அதன் காரணமாக அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி மற்றும் வளத்தை அளிக்கிறார். உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரத்தில் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்களை அளிக்கிறார். 

மீன ராசியில் குருவின் சஞ்சாரம் உலகளவில் உள்ள மக்களுக்கு வெற்றி, அமைதி மற்றும் பொருளாதார வளத்தை அளிக்கும். பெரும்பாலான மக்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவார்கள்.  பொருளாதார மேன்மை பெறுவார்கள். 

மீன ராசியில் சஞ்சரிக்கும் குரு நல்ல இனிய செய்திகளை கொண்டு வந்து சேர்க்கும். திருமணமானவர்களின் வாழ்வில் இனிமை இருக்கும். இளைய வயதினர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். 

மேஷராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் ராசியில் சஞ்சரிக்கும் குரு ஏப்ரல்  2022 முதல் ஏப்ரல்  2023 அந்த வீட்டுக்குரிய பலன்களை அளிக்கிறார். வெளிநாட்டின் மூலம் லாபம் கிட்டும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக இருக்கும். வெளிநாடு சென்று உயர் கல்வி படிக்க நினைப்பவர்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள். பண வரவு அதிகரிக்கும். அதை விட செலவுகள் அதிகமாக  இருக்கும். வெளிநாட்டில் குடியேற  நினைப்பவர்கள் இந்த வருடம் தங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறக் காண்பார்கள். 

நீங்கள் சிறந்த லாபம் காண்பீர்கள். கடந்த கால முதலீடுகள் மூலம் பண ஆதாயம் பெறுவீர்கள். ஆன்மீகம் மற்றும் எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  2022-2023 காலக்கட்டங்களில் உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். 2022 ஆம் வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் போராட்டத்திற்குப் பிறகு வெற்றியைக் காண்பீர்கள்.  

ரிஷபராசி அன்பர்களே! உங்கள் ராசிக்குப் பதினொன்றாம்  ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் எதிர்பாராத லாபங்களைக் கொண்டு வருவார். பல்வேறு வழிகளில் உங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். உங்கள் வேலை மற்றும் தொழில் மூலம்  லாபங்களும் ஆதாயங்களும் கிட்டும்.  ஏப்ரல் 2022க்குப் பிறகு ரிஷப ராசி அன்பர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்து காணப்படும். உங்கள் லட்சியம் மற்றும் சாதனைகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். 

படைப்புத்துறை மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் இருக்கும் ரிஷப ராசி அன்பர்கள் ஏப்ரல் 2022 க்குப் பிறகு கடின உழைப்பின் மூலம் நல்ல பலன்களைக் காண்பார்கள். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். உங்களில் சிலர் சமூக ஊடகங்கள் மூலமாக பெயரும் புகழும் பணமும் பெறுவீர்கள. 

மிதுனராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பெயர்ச்சி ஆகும் குரு பகவான் உங்கள் தொழிலில் ஆதாயம், லாபம் போன்றவற்றை அளிக்கவிருக்கிறார். தொழிலில் நீங்கள் சாதனைகளை செய்வதற்கு உறுதுணையாக இருப்பார். ஏப்ரல்  2022 முதல் உங்கள்  வாழ்வில் முன்னேற்றம், வளர்ச்சி, சமூக அந்தஸ்து மற்றும் சந்தோசம் கிட்டும். அரசாங்கத் துறையில் பணிபுரியும் மிதுன ராசி அன்பர்கள் உயர் பதவி கிடைக்கப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் மிதுன ராசி அன்பர்கள் தாங்கள் விரும்பும் வகையில் சிறந்த வேலை கிடைக்கப் பெறுவார்கள். 

தொழில் செய்யும் மிதுன ராசி அன்பர்கள் தங்கள் தொழில் விரிவாக்கத்தை சிறப்புறச் செய்வார்கள். தங்கள் தொழில் மூலம் சிறந்த லாபம் காண்பார்கள். வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் இந்த பெயர்ச்சி அனைத்து விதத்திலும் உங்களுக்கு லாபங்களை பெற்றுத் தரும். வயதில் மூத்த நபர்கள் மூலம் நீங்கள் ஆதரவும் அதிர்ஷ்டமும் பெறுவீர்கள். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக் கட்டங்களில் நீங்கள் வெளிநாட்டுப் பிரயாணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறந்த வெற்றிகளைக் காண்பார்கள். 

கடகராசி அன்பர்களே! மீன ராசியில் சஞ்சரிக்கும் குரு வெற்றியைக் கொண்டு சேர்க்கிறார். கடக ராசி அன்பர்களுக்கு வெவ்வேறு நாடுகள் மற்றும் நகரத்திற்கு செல்ல வாய்ப்பு கிட்டும்.   ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு உயர் கல்வி படிப்பவர்களுக்கு நல்ல வெற்றியை அளிப்பார். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவார்கள். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் அடிக்கும். உங்களில் சிலர் தந்தையின் தொழிலை எடுத்து நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்து கிடைக்கப் பெறுவீர்கள். எல்லா வகையிலும் நீங்கள் வெற்றியைக் காண்பீர்கள். மகிழ்ச்சி, வளர்ச்சி மற்றும் வாழ்வில் எல்லா வளங்களும் கிட்டும். 

உங்களில் சிலர் அச்சுத்துறை, மற்றும் சமூக ஊடகத் துறையில் பெயரும் புகழும் பெறுவீர்கள். பெரும்பாலான கடக ராசி அன்பர்கள் ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வருவார்கள். 2022 ஆம் ஆண்டில் ஆன்மீகத் துறைகளில் ஈடுபடுவார்கள். 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் அமைதியின்மை காணப்படும். சுப காரியங்கள் தடைபடும். பிறகு நிலைமை சீராகும்.

சிம்மராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில்  குரு  ஏப்ரல் 2022 வரை சஞ்சரிக்கிறார். எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் குருவால் சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரும். உங்கள் கடின முயற்சிகளுக்கு நீங்கள் சிறந்த பலன்களைக் காண்பது கடினமாக இருக்கும். சுக போக வாழ்வு மற்றும் வசதிகளில் சில குறைபாடுகள் காணப்படும். உங்கள் பணியிடத்தில் சிறந்த பலன்களைக் காண நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள நேரும். சிம்ம ராசி அன்பர்கள் சிலர் தங்கள் வேலையை இழக்க நேரும். உயர் பதவி காண்பதில் சில தடங்கல்கள் இருக்கும். சிலர் தொழிலில் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரும்.   

பூர்வீகச் சொத்துக்கள் மூலம் அல்லது வாழ்க்கைத் துணை பெற்றோர் வழியில் பண ஆதாயங்களைப் பெறுவீர்கள்.  ஆன்மிகம், ஜோதிடம் துறையில் இருப்பவர்கள் நல்ல வருமானம் பெறுவார்கள். பிரபலம் அடைவார்கள். உங்கள் முக்கியமான பணிகளில் சில தாமதங்கள் மற்றும் பதட்டங்கள் காணப்படும். 2022 ஆம் ஆண்டின் ஆரம்ப மூன்று மாதங்கள் வெற்றி, லாபம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு சேர்க்கும். 

கன்னிராசி அன்பர்களே ! உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில்  குரு பகவான் ஏப்ரல்  2022 முதல் சஞ்சரிப்பார். இந்த பெயர்ச்சிக் காலத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் குறுகிய கால இலக்குகளில் நீங்கள் வெற்றியைக் காண்பீர்கள். புதிய ஆரம்பம் ஒன்றை மேற்கொள்வீர்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை எதிர்பாராத வகையில்  கண்டு கொள்வீர்கள். திருமணம் நிச்சயம் ஆகும். திருமணமானவர்கள் அன்புடனும் அமைதியுடனும் வாழ்க்கை நடத்துவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் நீங்கள் பொருளாதார உதவி மற்றும் மேன்மை பெறுவீர்கள். 

கன்னி ராசி அன்பர்கள் தங்கள் தொழிலில் லாபம் மற்றும் ஆதாயம் காண்பார்கள். கூட்டுத் தொழிலிலும் ஆதாயம் பெறுவார்கள். உங்கள் சமூக அந்தஸ்து உயரும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். 2022 ஆம் ஆண்டின் ஆரம்ப முதல் மூன்று மாதங்களில் மோதல்கள் மற்றும் போராட்டங்கள் காணப்படும். பணியிடத்தில் அதிக சவால்களை சந்திக்க நேரும். 

துலாம்ராசி அன்பர்களே! ஏப்ரல்  2022 முதல் குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இந்த பெயர்ச்சி காரணமாக உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சில மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்ப வாழ்விலும் அமைதியின்மை இருக்கும். என்றாலும் உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பு அதிகமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மூலம் அதிக பணிகளைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் துலாம் ராசி அன்பர்கள் ஏப்ரல் 2022க்குப் பிறகு சிறந்த வேலை கிடைக்கப் பெறுவார்கள்.

உங்களில் சிலர் வழக்குப் பிரச்சினைகளை சந்திக்க நேரும். ஆனால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள்  வருமானத்தைக் கொண்டு உங்கள் செலவுகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். குடும்பத்திலும் சில ஆரோக்கியப் பிரச்சினைகள் காணப்படும்.  காதல் உறவில் சில பிரச்சினைகளும் பிரிவுகளும் காணப்படும். போட்டித் தேர்வு மற்றும் வேலைக்கான நேர்முகத் தேர்வில் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.  உங்கள் குடும்பத்துடன் நீங்கள் அதிக நேரம் செலவழிக்க இயலாது. வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் உங்கள் திருமண வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் காணப்படும்.

விருச்சிகராசி அன்பர்கள்! வெவ்வேறு நாடுகள் மற்றும் நகரங்களுக்கு பயணம் செய்வார்கள். அதன் மூலம் வெற்றியும் காண்பார்கள். 2022 ஆம் ஆண்டுக் காலக் கட்டடத்தில் விருச்சிக ராசி அன்பர்களில் சிலர் தங்கள் எழுத்து மற்றும் அச்சுத்துறை மூலம் பிரபலம் அடைவார்கள். திருமணத்திற்குக் காத்திருக்கும் அன்பர்கள் தங்களுக்கு ஏற்ற துணையைப் பெறுவார்கள். காதலர்களுக்கு காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சிலரது காதல் உறவுகள் திருமணமாக மாறும். 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் சில பயணங்களை மேற்கொள்ள நேரும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் நீங்கள் சில மாற்றங்களைக் காண்பீர்கள். 

ஏப்ரல்  2022 முதல் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இந்தப் பெயர்ச்சியில் குரு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் இன்பமும் அளிப்பார். படைப்புத் தொழில் மற்றும் பொழுது போக்குத் துறையில் இருப்பவர்கள் வெற்றியைப் பெறுவார்கள். சிலர் விளையாட்டுத் துறையிலும் வெற்றியைக் காண்பார்கள்.  விருச்சிக ராசி அன்பர்கள் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பொழுது போக்குத் துறைகளில் புகழைப் பெறுவார்கள். ஆசிரியர் தொழில், வியாபாரம் மற்றும் வணிகத் துறை மற்றும் விளம்பரத் துறையில் பணிபுரியும் சில விருச்சிக ராசி அன்பர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள்.  

 

 

தனுசுராசி அன்பர்களே! ஏப்ரல் 2022 முதல் குரு உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இந்தப் பெயர்ச்சி அமைதி, மகிழ்ச்சி மற்றும் வாழ்வில் லௌகீக இன்பங்களை பெற்றுத் தரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். சொத்து வாங்கல் விற்றல் தொழிலில் இருப்பவர்கள் அதிக அளவில் வருமானம் ஈட்டுவார்கள். உங்களுக்கும் உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். வரவு அதிக அளவில் இருக்கும். செலவுகளும் அதற்கேற்ப இருக்கும். திருமணத்திற்குக் காத்திருக்கும் அன்பர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை வெளிநாடு அல்லது நகரங்களில் இருந்து கிடைக்கப் பெறுவார்கள். 

உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப் பெறுவீர்கள். உத்தியோக வளர்ச்சி, ஊதிய உயர்வு, மற்றும் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள்.  உங்கள் இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  வருடத்தின் ஆரம்ப மூன்று மாதங்கள் போராட்டம் மற்றும் அதிகப் பணிகள் இருக்கும். குடும்ப அமைதியில் சில குறைபாடுகள் இருக்கும். 

மகரராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் ஏப்ரல்  2022 முதல் சஞ்சாரம் செய்யும் குரு அதிருப்தி, மனச்சோர்வு மற்றும் உங்கள் உத்தியோகத்தில் தடைகளை ஏற்படுத்துவார். நீங்கள் உங்கள் வேலை மற்றும் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கூடுதல் நேர உழைப்பு மற்றும் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  சில மாதங்களுக்கு பணத்ததை பண்படுத்த இயலாத வகையில் பண முடக்கம் இருக்கும். ஊக வணிகங்கள் மூலம் நீங்கள் நஷ்டமடைய நேரலாம். முதலீடுகளின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிட்டுவது கடினம். தொழிலில் ஏற்ற இறக்க நிலை இருக்கும். 

உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்வில் ஏமாற்றங்கள் இருக்கும். திருமண முறிவு, விவாகரத்து, பிரிவு போன்ற பிரச்சிணைகளை நீங்கள் சந்திக்க நேரும். உங்களில் சிலர் நீங்கள் விரும்பும் துணையை திருமணம் செய்து கொள்ள வாயுப்பு கிட்டும். குடும்பத்தில் அமைதி குறைவு இருக்கும். முதல் மூன்று மாதங்கள் நீங்கள் லாபம், ஆதாயங்கள், மற்றும் சிறந்த பண வரவைப் பெறுவீர்கள். 

கும்பராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில்  சஞ்சாரம் செய்யும் குரு பகவான் உங்கள் வாழ்வில் செல்வம் மற்றும் வளங்களை அள்ளித் தரவிருக்கிறார். உங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் திருப்திகரமான நிலை இருக்கும். உங்கள் திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் அமைதியும் மகிழ்ச்சியும் பெறுவீர்கள்.   நீங்கள் பல வகைகளில் பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். அபரிமிதமான பொருளாதார வசதி மற்றும் வளங்களைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கென  நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை உண்மையாக நேசிப்பவராகவும், உங்கள் மீது அக்கறை கொண்டவராகவும் இருப்பார். உங்களில் சிலர் உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவீர்கள். 

உங்களில் சிலர் புதிய தொழிலை மேற்கொள்வீர்கள். உங்கள் தொழிலில் அபார வெற்றி காண்பீர்கள். ஏற்கனவே தொழில் செய்துகொண்டிருப்பவர்களுக்கு தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் மூலம் லாபங்கள் கிட்டும்.  உங்கள் சமூக அந்தஸ்து உயரும். முதல் மூன்று மாதங்கள் நீங்கள் தடைகளையும் தாமதங்களையும் சந்திப்பீர்கள். உங்கள் பணிச்சுமை அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களைக் காண்பது அரிது. 

மீனராசி அன்பர்களே! உங்கள் ராசியிலேயே  குருவின் சஞ்சாரம் இருக்கும் காரணத்தால் ஏப்ரல் 2022 க்குப் பிறகு நீங்கள் உங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அற்புதமான பலன்களைப் பெறுவீர்கள். 2022 ஆம் ஆண்டில் இளம் மீன ராசி அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் மதிப்பு மரியாதை மற்றும் அந்தஸ்து கூடப் பெறுவார்கள். உத்தியோகத்தில் உயர் பதவி அடைவீர்கள். தொழில் செய்பவர்கள் தங்கள் தொழில் மூலம் லாபம் காண்பார்கள். குரு பெயர்ச்சி காலக் கட்டத்தில் உங்கள் தொழிலில், அது தனிப்பட்ட தொழில் என்றாலும் சரி, கூட்டுத் தொழில் என்றாலும் சரி நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிக அளவில் பணிகள் காணப்படும். அதிக அளவில் செலவுகளை சந்திப்பீர்கள். சேமிப்பு குறையும். பணப்புழக்கம் சீராக இருக்காது. 

உங்கள் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்வில் வசதிகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.  உங்களில் சிலர் ஆடம்பரமான வீட்டிற்கு குடி புகுவீர்கள். வெளி நாடு அல்லது வெளி நகரங்களில் வேலை கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் சமூக அந்தஸ்து மற்றும் புகழ் பெருகும். சமூக ஊடகங்கள் மூலம் நீங்கள் பயன் பெறுவீர்கள். விளையாட்டு மற்றும் பொழுது போக்குத் துறையில் இருப்பவர்கள் இந்த பெயர்ச்சி காலங்களில் சிறப்பாகச் செயலாற்றுவார்கள்.   

Post Views: 270
error: Content is protected !!
Call Now