மந்திரம் – எதிர்ப்புகள் மற்றும் சோதனைகள் விலக

நாம் இருக்கும் நிலையிலிருந்து வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மக்கள் நேர்மையான முறையில் உழைத்து, சேமித்து நடுத்தர நிலைமையில் இருந்து ஒரு படி காலை மேலே எடுத்து வைக்க உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும். உழைக்க வேண்டும். நிச்சயமாக சராசரி வருமானத்தில் இருக்கும் அனைவருக்குமே இந்த கஷ்டம் அனுபவத்தில் புரிந்திருக்கும்.

எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி நம்முடைய வாழ்க்கையில் முன்னேற நம்முடைய விடாமுயற்சி முதலில் மிக மிக அவசியம். இதைத்தாண்டி நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை நம்மிடம் வர வேண்டும். அதாவது வசிய தன்மை. எல்லாவற்றையும் நம் வசப்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. அந்த வித்தையை சுலபமாக எல்லோராலும் அடைந்துவிட முடியாது. இயற்கையாகவே சிலர் கவர்ந்திழுப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

சில பேருக்கு வசிய தன்மை குறைவாக இருக்கும். இந்த வசிய தன்மையை அதிகரித்துக் கொள்ள சூட்சமமாக சொல்லப்பட்டுள்ள ஒரு மந்திரத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த மந்திரம் உங்களை, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு உயிர்த்தி முன்னேற்றப்பாதையில் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும். உங்களை அறியாமலேயே உங்களுக்குள் ஒரு வசிய தன்மை வந்துவிடும். சிலபேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இவங்களை பார்க்கப் பார்க்கப் பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கு. இவங்க கூட பேச பேச பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு. அவங்க கிட்ட ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு என்னனு தெரியல! அப்படி சொல்லி கேள்வி பட்டிருப்போம் இல்லையா.

இப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தியை நம்மிடம் கொண்டு வந்து விட்டால் போதும். நமக்கு எல்லாம் நன்மையாகவே நடக்கும். நம்மை சுற்றி இருப்பவர்களும் நம்முடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள்.  உங்களுடைய முன்னேற்றத்திற்கு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். அப்போது தடைகள் நீங்கும். வாழ்க்கையின் ஈசியாக ஜெயித்து விடலாம்.

சரி சரி, அந்த மந்திரம் என்ன என்று தெரிந்துகொள்ள நிச்சயமாக எல்லோருக்கும் ஆர்வமிருக்கும். உங்களை வசீகரமாக மாற்றப்போகும் அந்த மந்திரம் இதோ.

‘ஓம் வசி வசி சிம் வசி’

இவ்வளவு தாங்க. இந்த மந்திரத்தை தினம்தோறும் காலையில் எழுந்து குளித்துவிட்டு கிழக்கு பார்த்தவாறு சாதாரணமாக அமர்ந்து 27 முறை இந்த உச்சரித்து விட்டு உங்களுடைய வேலையை தொடங்குங்கள். உங்களுக்கு வாழ்க்கையில் எதிர்ப்புகளே இருக்காது என்று சொல்ல வரவில்லை. வரக்கூடிய எதிர்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமானதாக மாறிவிடும். உங்களை கண்டு மயங்கி விடும் என்று வைத்துக் கொள்ளுங்கள்‌. பிறகு வாழ்க்கையில் சுலபமாக முன்னேற்றம் அடைந்து விடலாம். வாழ்க்கையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல இந்த மந்திரம் நிச்சயம் கை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து பயன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

error: Content is protected !!
Call Now