நவராத்திரி 2020 : ஏன் இந்தாண்டு ஒரு மாதம் தாமதமாக நவராத்திரி கொலு கொண்டாடப்படுகிறது?
மகாளய அமாவாசையை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்த நவராத்திரி கொண்டாட்டம், இந்தாண்டு ஒரு மாதம் தாமதமாக கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதற்கான காரணமும், தேவியின் 9 ரூபங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்…
இரண்டு வாரங்கள் நீடிக்கக் கூடிய பித்ரு பட்சம் எனும் மகாளயபட்சம் செப்டம்பர் 2ம் தேதி தொங்கி செப்டம்பர் 17ம் தேதி முடிவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும், மகாளய அமாவாசை முடிந்தவுடன் துர்க்கை அம்மனை வழிபடக்கூடிய நவராத்திரி பூஜை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதம் கழித்து தான் நவராத்தி கொண்டாடப்பட உள்ளது.
பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்
நவராத்திரி கொலு எப்போது?
புரட்டாசி இரண்டாவது அமாவாசை முடிந்த பின்னர் மறுநாள் ஐப்பசி 1 (அக்டோபர் 16) நவராத்திரி கொலு கொண்டாட்டம் தொடங்குகிறது.
நவராத்திரி ஆரம்பம் காலை 7.31 – 9.00 மணிக்குள் கொலு வைக்க மிக நல்ல நேரம்.
நவராத்திரி தினத்தில் ஒவ்வொரு தினத்தில் அம்மன் எந்த ரூபத்தில் காட்சி தருவார் என்பதை பார்ப்போம்.
நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனின் ரூபத்திலும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியின் அவதாரங்களாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் ரூபங்களாக நமக்கு காட்சி தருவார்.