புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?
பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பது வழக்கம். இந்த விரதத்தை முறையாக இருந்தால் நாம் பல பலன்களை அடையலாம். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.
புரட்டாசி சனி விரதம் இருப்பது எப்படி
புரட்டாசி சனிக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலமிட்டு பின் குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையின் இருபக்கமும் குத்து விளக்கேற்ற வேண்டும். பின் அலங்கார பிரியரான வேங்கடேசப் பெருமாள் அலர்மேல்மங்கை தாயாருடன் இருக்கும் படத்தை பூஜை அறையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். – Advertisement – அதன் பிறகு மாவிளக்கேற்றி நாம் அன்று சுவாமிக்கு படைக்க இருக்கும் நிவேதியங்களான சர்க்கரை பொங்கல், வடை, பாயசம் போன்றவற்றை படைத்தது புஜயை துவங்க வேண்டும். பெருமாளுக்குரிய பாடலையும் சுலோகங்களையும் பூஜையின்போது சொல்லலாம். புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நாம் பெருமாளின் அருளோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம். இதனால் வீட்டில் உள்ள அனைத்து புருளாதார பிரச்சனைகளும் தீரும். அதோடு வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். சனி தோஷம் இருக்கும் ஜாதகர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோயிலிற்கு சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதன் மூலம் சனி தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவர். அதோடு அஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி போன்ற சனியின் பிடியில் இருப்பவர் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிராதிப்பதன் மூலம் சனியின் உக்கிரம் குறைந்து சனியால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் ஏற்றம் பெறுவர்.புரட்டாசியில் விரதம் இருப்பதோடு, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அளிப்பதன் மூலம் ஏழைகளின் பசி பறந்தோடுவது போல நம் துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும்.
புண்ணியம் தரும் புரட்டாசி சனி – பெருமாளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில் எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். புரட்டாசி திருவோணத்தில்தான் ஸ்ரீனிவாசப்பெருமாள் அவதரித்தார் என்பதால் புரட்டாசி மாதம் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருமலைவாசன் ஏழுமலையானுக்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள். சனிபகவானல் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.