விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்வது?
விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்வது, பூஜைக்கான விதி முறைகள், தேவையான பூஜை பொருட்கள்
முழு முதல் கடவுளாக விநாயகர் பார்க்கப்படுகின்றார். எந்த கோயிலாக இருந்தாலும், எந்த கடவுளாக இருந்தாலும், அவரை வணங்குவதற்கு முன்னர் நாம் விநயாகரை வணங்கும் பொருட்டு ஒரு விநாயகர் சன்னதி இருக்கும். அப்படிப்பட்ட முழு முதல் கடவுள் அவதரித்த தினம் விநாயகர் சதூர்த்தியாக கொண்டாடப்படுகின்றது.
விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. கிட்டத்தட்ட 11 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். 11வது நாள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை கடல், ஆறும் குளம், கிணறு போன்ற நீர் நிலைகளில் விஜர்னம் செய்வது வழக்கம். விநாயகர் சதூர்த்தி பூஜைக்கு தேவையான பொருட்கள்:
• விநாயகர் சிலை
• மலர்கள்
• பால்
• தயிர்
• தேன்
• இளநீர்
• நீர்
• அரிசி மாவு
• நல்லெண்ணை
• மஞ்சள் தூள்
• சீகைக்காய் தூள்
• சந்தனம், குங்குமம்
சந்திரனுக்கு சாபம் கொடுத்த கணபதி… என்ன ஆனது தெரியுமா?
• பஞ்சாமிர்தம். (பால், சர்க்கரை, நெய், தேன், வாழைப்பழம் சேர்த்து பிசைந்து செய்யப்பட்ட பஞ்சாமிர்தம்).
• விநாயகருக்கான புது துணி (சிறிய புது துணி இருந்தால் போதுமானது)
• அருகம் புல் (விநாயகருக்கு மிகவும் பிடித்தது)
• எருக்கம் பூ மாலை
• எருக்கம் பூ
• பூக்கள்
• பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு, மாவிலை.
• சிறிய வாழை மரம்.
பூஜைக்கு முன் செய்ய வேண்டியவை:
ஒரு பலகையை எடுத்து அதை சுத்தம் செய்து, கோலமிட்டு, அதன் மீது பிள்ளையார் சிலையை வைக்கவும். அவருக்கு மஞ்சள் அல்லது சந்தனத்தால் பொட்டு வைத்து, அதன் மீது குங்கும திலகம் இடுங்கள்.
பிள்ளையார் சிலைக்கு முன் ஒரு பித்தளை தட்டு வைத்து, அதில் சிறிது அரிசியை போட்டு அதன் மீது ஒரு தூய வெற்றிலை வைக்கவும். பின்னர் மஞ்சள் தூளுடன் சிறுது தண்ணீர் ஊற்றி பிள்ளையார் பிடித்து, வெற்றிலை மீது வைக்கவும்.
‘ஓம் கம் கணபதயே நமஹ;’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருங்கள்.
32 வடிவங்களில் அருளும் விநாயகரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மாலை:
களிமண்ணால் செய்யபப்பட்ட விநாயகருக்கு நீங்கள் வாங்கிய புது துணியால் அலங்கரிக்கலாம். அதற்கு எருக்கம் பூ மாலை, மலர் மாலையை சூட்டவும், அருகில் அருகம் புல் பரப்பி வைக்கலாம்.
விநாயகர் வழிபாடு:
எந்த ஒரு பூஜையை தொடங்கும் முன்னர் கணபதியை வணங்கிவிட்டு தான் தொடங்க வேண்டும். பின்னர் குல தெய்வத்தை கும்பிட வேண்டும். விநாயகர் சதுர்த்தியில், நாயகனான கணபதியை வழிபட்டு பூஜையை தொடங்கலாம்.
குல தெய்வ வழிபாடு:
முதலில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். குலதெய்வ படம் இருந்தால் அதை கும்பிடலாம், அப்படி அந்த படம் இல்லாதவர்கள் ஒரு சிறிய கலசத்தில் தூய நீரை நிரப்பி வைத்து, குல தெய்வமாக வழிபடவும். இந்த நீரை ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றும் போது அதில் உள்ள தண்ணீரை செடிக்கு ஊற்றி புதிதாக மாற்றலாம்.
தீப, தூபத்தை காட்டி நாம் பிள்ளையார் வழிபாட்டை தொடங்கலாம்.
பூஜையை தொடங்கும் போது விநாயகர் குறித்த மந்திரங்கள் தெரிந்தால் சொல்லுங்கள், அல்லது
‘ஓம் விநாயகனே நமஹ:
ஓம் கணபதியே நமஹ:’
என மூன்று முறை மனதில் சொல்லி பூஜையை தொடங்கலாம்.
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ விநாயகர் சதுர்த்தி அன்று ஷோடஷோபாச்சார பூஜை வழிபாடு முறைகள்
வெண்கல சிலை:
நாம் விநாயகர் சதூர்த்தி தினத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்வது மிகவும் விசேசமானது. ஆனால் நம்மில் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்ட சிலை வைத்து பூஜிப்பது வழக்கம். களிமண் விநாயகரை புதிதாக வாங்கி பூஜிப்பது சிறப்பானது.
அதே சமயம் நாம் அபிஷேகம் செய்ய வெண்கல விநாயகரை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த சிலைக்கு பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், அரிசி மாவு, இளநீர், சர்க்கரை, சந்தனம் என வரிசையாக அபிஷேகம் செய்ய வேண்டும்.
அபிஷேகம் செய்த விநாயகரையும் நாம் அலங்கரித்து, புது விநாயர் அருகில் வைத்து பூஜை செய்து வழிபடலாம்.
நெய் வேதியம்:
பிள்ளையாருக்கு அப்பம், மோதகம், கொழுகட்டை, முருக்கு, பழங்கள் ஆகியவை மிகவும் பிடிக்கும் என்பதால், அவற்றை அபிஷேகம் முடிந்த உடன் சுவாமி சிலை அருகில் வைத்து பூஜை செய்யலாம்.
பொதுவாக பழங்கள் அல்லது நெய் வேதிய பொருட்கள் ஒற்றைப் படையில் வைப்பது நல்லது. 5, 7, 11 என வைக்கலாம்.
மந்திரங்கள்:
பிள்ளையாருக்கு பூஜை, அபிஷேகம் செய்யும் போது விநாயகருக்கு உகந்த மந்திரங்கள், போற்றி பாடலை பாடலாம். பூஜை முடித்த பின்னரும், பிள்ளையாரின் அருகில் அமர்ந்து மந்திரங்கள், விநாயகர் போற்றியை பாடலாம்.