சூரிய கிரகணத்தால் பாதிக்கப் போகும் ராசி, நட்சத்திரங்கள் எது? பாதிக்காமல் இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்
இந்த கிரகணத்தின் போது, சூரியன் மிதுன ராசியில் இருக்கின்றார். ஆகவே, மிதுன ராசிக்காரர்கள் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் திருவாதிரை, மிருகசிரிஷம் இந்த இரண்டு நட்சத்திரகாரர்களுக்கும் கிரகதோஷம் உள்ளது. இதனால், உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தால் திருவாதிரை, மிருகசீரிஷம் நட்சத்திரம் கொண்டவர்கள் உங்களது ஜாதகத்தை, கொண்டுபோய், உங்கள் குடும்ப ஜோசியரிடம் காட்டி உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. தோஷம் தாக்காமல் இருக்க முன்கூட்டியே பரிகாரம் செய்து கொள்ளலாம்.
இதுதவிர புனர்பூசம், ரோகிணி, சதயம், பூரட்டாதி, சுவாதி இந்த நட்சத்திரகாரர்கள் சூரிய கிரகணம் முடிந்த உடன் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். மிதுன ராசியை சேர்ந்தவர்களும், மேற்குறிப்பிட்டுள்ள நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் கோதுமையை தானமாகக் கொடுப்பது சிறந்த பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. கோதுமையோடு சேர்த்து மட்டை தேங்காயையும் தானமாக கொடுக்கலாம்.
இந்த கிரகண காலத்தில் குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும் கட்டாயம் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் குறிப்பிட்ட இந்த கிரகண நேரத்தில், தண்ணீர் கூட குடிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. முடிந்தவரை எல்லோருமே கிரக நேரத்திற்கு முன்பாகவே உணவு அருந்திவிட்டால் நல்லது.