செவ்வாய் தோஷம் என்றால் என்ன மற்றும் பரிஹாரம்

செவ்வாய் தோஷம் என்பது 2,4,7,8,12 ஆகிய வீடுகளிலும் , லக்னத்திலும் செவ்வாய் இருப்பதால் ஏற்படுகிறது.செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான தோஷமாக கருதபடுகிறது. ஆனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என முடிவு செய்வதற்கு முன்னால் சில விதிவிலக்குகளையும் (exceptions) கவனித்து பிறகே முடிவு செய்ய வேண்டும் .சில விதிவிலக்குகளை கீழே கொடுத்து உள்ளேன். மேலும் இதுபோன்ற சில விதிவிலக்குகள் உள்ளன. உங்கள் ஜோதிடரை கலந்து ஆலோசித்து பிறகு செவ்வாய் தோஷ ஜாதகங்களை பற்றி முடிவு செய்யவும்.

• செவ்வாய் மேஷ ராசி அல்லது விருசிக ராசியில் ஆட்சி அடைந்து இருந்தாலோ மற்றும் மகர ராசியில்     உச்சம் அடைந்து இருந்தாலோ செவ்வாய் தோஷம் இல்லை எனலாம்

• கடகத்தில் நீச்சம் அடைந்தாலும் தோஷம் இல்லை

• சிம்ம லக்னம் மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம்   இல்லை

• செவ்வாய் குரு அல்லது சனி அல்லது சூரியன் அல்லது புதன் அல்லது சந்திரன் ஆகிய கிரகங்களில்  எதாவுது ஒன்றுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்கபட்டாலோ செவ்வாய் தோஷம் இல்லை.

error: Content is protected !!
Call Now