சித்திரை நக்ஷத்திரம் 3,4, பாதங்கள், சுவாதி,விசாகம், 1,2,3,பாதங்களில் பிறந்த துலை ராசிக்காரர்கள் செல்வம் மிகுந்தகுடும்பத்தில் செல்வாக்குடன் இருப்பார்கள்.நல்ல ஜசுவரியமும்,தனதான்யங்களும்,பூமி காணி வீடு போன்ற சொத்துக்களையும் வண்டி வாகனங்களையும்,மாடு கன்றுகளுடன் பால் பாக்யத்தையும் பெற்று இருப்பார்கள்.
குடும்பத்தில் அதிகமான நபர்கள் இருப்பார்கள். பெரிய மனிதர்கள், செல்வாக்கு அதிகாரம் உயர்பதவி கொண்டவர்களாகளின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.தார்மீக குணங்களும், தெய்வ வழிபாடுகளும் நிறைந்து விளங்கும்.ஆசார அனுஷ்டானங்களைச செய்து வருவார்கள்.
கிருத்திகை 2,3,4, பாதங்கள், ரோஹிணி,மிருக சீருஷம் 1,2, பாதங்கள் இவைகளாகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள்,அதாவது விடைராசிக்காரர்கள் பருந்த உடலும்,கம்பீரமான தோற்றமும்,மெதுவான செய்கைகளையும் மந்தமான குணங்களுடன்,கல்வி ( education ) கணிதம் (Maths) சாஸ்திரங்களை ஓரளவு கற்றும், தேவாலய தெய்வீக வழிபாடுகளுடன்,பக்தி,சிரத்தையுடன் இருப்பார்கள். ஆடை ஆபரணம், நகைகள், செல்வம் ( wealth ), முதலியவைகளைப் பெற்றிருப்பார்கள்.
வேடிக்கையாகப் பேசும் குணங்களுடன், புத்திரர்களிடாத்திலும், மற்றும் குழந்தகளிடத்திலும் ( children ) பிரியமாகப் பேசியும் பழகும் குணமும் இருக்கும். புளிப்பு,காரம், வஸ்துவில் பிரியம் அதிகம். தாங்கள் தாராள குணத்துடன் செலவு முதலியவைகளைச செய்யாமல், பிறரை செய்யும்படிஸ் சொல்லி, அதனால் பலங்களைத் தாங்கள் பெறுவார்கள்.
வண்டி வாகனங்களுடன் ( vehicles ) செல்வத்துடனும்,செல்வாக்குடனும், இவர்கள் 80 வயதுக்கு மேலும் சரீர சுகங்களுடன் இருப்பார்கள்.
மிருக சீருஷம் 3,4, பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 பாதங்களில் பிறந்தவர்கள் ஆடவைராசிக்காரர்கள் ஆவார்கள். அதிகமான எண்ணங்களையும், நோக்கங்களையும் பெற்று,கல்வியில் தேர்ச்சியும்,கணிதத்தில் வன்மையும், பேச்சில் சாமர்த்திஉஅத்தையும், ஸ்தா சிரித்துப்பேசும் குணமும் கபடமும் தந்திரங்களும், சுயநலக் காரியவாதிகளாகவும் இருப்பார்கள். தெய்வீக வழிபாடுகளும், ஆசார அனுஷ்டானங்களீல் நம்பிக்கையும், கீர்த்தியையும் பெற்றிருப்பார்கள்.
நீண்ட திரேகமும் உடலமைப்பையும் கருமை நிறமாகவும், பித்த சம்பந்தமான வியாதிகளுடனும், தைர்யஸ்தர்களாகவும்,இருப்பார்கள். தான் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கறாரும்,கண்ணியமும் நிறைந்திருக்கும். எழுதுவதில், கலைத்துறையில் ஆர்வமும், திறமையும் பெற்றிருப்பார்கள். செல்வத்துடனும், செல்வாக்குடனும் தங்களது திறமையினால் முன்னேற்றத்தை அடைவார்கள். ஆயுள் 70 வரையில் தீர்க்கமெனக் கூறலாம்.