முழுநிலவு தரிசனம் மொட்டைமாடியில்! சித்ரா பெளர்ணமி வழிபாடு

சித்ரா பெளர்ணமியில் காலையிலும் மாலையில் பூஜைகள் செய்து வணங்குங்கள். மாலையில், வீட்டு வாசல இரண்டு அகல் விளக்கு ஏற்றி வையுங்கள். 7.5.2020 வியாழக்கிழமை சித்ரா பெளர்ணமி.
சித்ரா பெளர்ணமி நன்னாளில், வீட்டில் பூஜைகள் மேற்கொள்ளவேண்டும். காலையும் மாலையும் மறக்காமல் பூஜை செய்து வழிபடுங்கள். மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபடுவது குடும்பத்துக்கு நன்மைகள் பலவற்றையும் வழங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம். அதேபோல், கடற்கரைப் பகுதி, ஆற்றங்கரை, குளக்கரை ஆகிய இடங்களில், மாலையில் வீட்டில் பூஜித்துவிட்டு, கையில் உணவையெல்லாம் எடுத்துக்கொண்டு, குடும்பத்தாருடன், உறவினர்களுடன், அக்கம்பக்க நண்பர்களுடன் சென்று, வட்டமாக அமர்ந்துகொண்டு, நிலாச்சோறு சாப்பிடுவார்கள்.

அப்போது, கரைப்பகுதியில் இருந்துகொண்டு, அங்கே வெட்டவெளியில் இருந்தபடி, நிலாவைப் பார்த்து பூஜித்து வழிபடுவார்கள். அதற்காக, பூஜை சாமான்களுடனும் உணவுகளுடனும் உறவினர்கள் சகிதமாக ஊர்வலமாகச் செல்வார்கள். ஆனால் தற்போதைய சூழலில், இவையெல்லாம் சாத்தியமில்லை. சமூக இடைவெளியையெல்லாம் கருத்தில் கொண்டு, வீட்டிலேயே வழிபாடு செய்யுங்கள்.

மாலை பூஜையை முடித்துவிட்டு, வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டே, உணவு பரிமாறுங்கள். குடும்பமாக அமர்ந்து மொட்டைமாடியில் பெளர்ணமி முழுநிலவை தரிசியுங்கள். பெளர்ணமியின் முழு நிலவு பிரகாசிக்கும் அற்புத வேளையில், அதன் கதிர்கள், நம் மீதும் இந்த பூமியின் மீதும் விழுந்து நல்ல அதிர்வுகளை உண்டாக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

error: Content is protected !!
Call Now