பொது தகவல்கள்

நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா?

நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கனும்னு நாள் குறிச்சு ஜோசியர்கிட்ட வாங்கிட்டு சிசேரியன் செய்துக்கிறாங்களே சிலர்..இந்த ஜாதகம் எல்லாம் பலன் கொடுக்குமா..?
சிசேரியன் இப்போ ஆரம்பித்த பழக்கம் இல்லை..சோழ மன்னர்கள் காலத்திலேயே நடந்திருக்கிறது..தன் மகன் தனக்கு பின் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக ஜோசியரிடம் நேரம் குறித்துக்கொண்டான் சோழ மன்னன்.குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது..தன் மகன் மன்னன் ஆக வேண்டும் ஜோசியர் குறித்த நேரத்தில்தான் தன் மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக அந்த ராணி யாரும் நினைத்து பார்க்க முடியாத உத்தரவை பிறப்பித்தாள் என்னை தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள் ..அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்னை அவிழ்த்துவிடுங்கள் அப்போதுதான் குழந்தை பிறக்க வேண்டும் என சொல்ல அதன்படி செய்யப்பட்டது..தலைகீழாக இருந்து பிறந்ததால் அக்குழந்தை கண்கள் ரத்தமாக இருந்தன..அவர்தான் செங்கண் சோழன் ..சோழ ராஜ்ஜியத்தில் பெரும் சாதனைகளை செய்த மன்னன்.
என்னதான் சிசேரியனுக்கு நால் குறித்தாளும் ,பெரும் கிரகங்களான சனியும்,குருவும் இருக்கும் ராசியை மாற்ற முடியாது..லக்னத்தை மாற்றலாம்..ராசியை மாற்றலாம்..பூர்வபுண்ணியம்,வம்சாவழி தோசங்களை நீக்க முடியாது..அக்குழந்தை யோகசாலியாக இருப்பான் என அவன் விதி இருந்தால்தான் சிசேரியன் மூலம் நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க முடியும் இதுவும் விதிப்படியே நடக்கும்.
விதியை நீ மதியால் வெல்வாய் என்பதே உன் விதியாய் இருந்திருக்கும்..!!!

தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகளில் அன்னதானமும்,வஸ்திரதானமும்

முன்னோர்களுக்குரிய வழிபாட்டினை மேற்கொள்ள சிறப்பான நாள் அமாவாசை. இந்தநாளில் முன்னோர்களை நினைத்து புனித நீர் நிலையில் தர்ப்பணங்கள் செய்தால் பிதுர்தோஷம் நிவர்த்தியாவதுடன், முன்னோரின் ஆசியும் கிட்டுமென்று தர்மநூல்கள் கூறுகின்றன. மாதந்தோறும் வரும் அமாவாசைகளில், தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகள் மிகவும் சிறப்பானவை. இதில் மகாளயபட்ச அமாவாசையென்று சொல்லப்படும் புரட்டாசி மாத அமாவாசைக்கு கூடுதல் சிறப்புண்டு. அது என்னவென்றால், அமாவாசை திதியில் மட்டுமின்றி, அதற்கு முன்னுள் தேய்பிறை நாட்கள் அனைத்திலுமே முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த பூர்வபட்ச நாட்களில் நம் மூதாதையர் பூமியை மிக நெருங்கி வருவதாக ஐதீகம்.

அன்றைய நாளில் நம் முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்..நம் துன்பங்கள் தீரும்..இத்தயக புண்ணிய நாளில் தான தர்மம் செய்வதும் அன்னதானம் செய்வதும் அளவில்லாத நன்மைகளை வாரிவழங்கும் பல மடங்கு புண்ணியத்தை தரும்…அன்னதானம்,வஸ்திரதானம் மட்டுமே நம் உயிரை காக்கும்.