தற்போதைய தகவல்

முக்திநிலைஅளிக்கும் ஆருத்ரா தரிசனம்

மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலத்தை தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம். இந்நாளிலேயே இறைவன் நடராஜப்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். அது […]

மங்களவார விரதம்

நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள் முழுவதும் செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டித்தல். தெய்வம் : பைரவர், வீரபத்திரர். விரதமுறை : பகலில் ஒருபொழுது சாப்பிடலாம். பலன் : பயணத்தின் போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்.

உமா மகேஸ்வர விரதம்

நாள்                : காத்திகை மாத பவுர்ணமி. தெய்வம்       : பார்வதி, பரமசிவன். விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக் கூடாது. பலன்             : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

Scroll to top
error: Content is protected !!