ஜோதிட குறிப்புகள்

ராசிகளின் திக்குகள்

ராசிகளின் திக்குகளை நினைவில் கொள்ள ஒரு வழிமுறை உள்ளது.  கீழே பாருங்கள்.  மீன ராசியிலிருந்து வடகிழக்கு, தென்மேற்கு என நினைவில் கொள்ளுங்கள் பின்பு மீண்டும் அதே வரிசையில் போடுங்கள்  தவறுகள் வராது.

வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு
மேற்கு இராசி வடக்கு
தெற்கு கிழக்கு
கிழக்கு வடக்கு மேற்கு தெற்கு

கிரகங்களின் ஆதிபத்யம், உச்சம், நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள்

ஜோதிடத்தில் கிரகங்கள் தாங்கள் பெற்ற ஆதிபத்யம் மற்றும் தான் அமர்ந்துள்ள வீட்டில் இருக்கும் பலம் (அ) பலவீனத்திற்கேற்றவாறு பலன்களை அளிக்கின்றனர்.
ஆதிபத்யம் என்பது ஒவ்வொரு லக்னத்திற்கேற்றவாறு மாறுபடும்.  கிரகங்களின் பலம் என்பது தாங்கள் அமர்ந்துள்ள வீடு உச்சம், ஆட்சி, நட்பு, சமம், பகை, நீசம் ஆகிய நிலைகளுக்கு ஏற்றவாறு பலன்களை தருகின்றன.
கிரகங்களின் உச்சம், நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள் அனைவருக்கும் எளிதாக தெரியும்.  ஆனால் நட்பு, சமம், பகை போன்ற நிலைகளை தெரிந்து வைத்திருப்பது என்பது ஆரம்ப நிலை ஜோதிடர்களுக்கு சற்று தடுமாற்றத்தை தரும்.
அதற்கான ஒரு சூத்திரம் கீழே தந்திருக்கிறேன் பாருங்கள்.
1.  கிரகங்கள் தாங்கள் மூலத்திரிகோணம் அடையும் ராசிகளுக்கு 2,12, 4, 5, 8, 9 ஆகிய வீடுகள் நட்பு வீடுகளாகும்.
2.  ஏனைய வீடுகள் (3,6,7,10,11) பகை வீடுகளாகும்.  இவற்றில் ஒரு வீடு நட்பாகவும் மற்றது பகையாகவும் இருந்தால் அது சம வீடாகும்.
3. கிரகங்கள் உச்சம் அடையும் வீட்டிற்கு அதிபதியான கிரகத்தின் மற்றொரு வீடு பகையாக வந்தாலும் சமம் என்று கொள்ள வேண்டும்.
இதற்கு உதாரணம் தருகிறேன் பாருங்கள்:-
சூரியன் உச்சம் அடைவது மேஷ ராசி
நீசம் அடைவது அதற்கு 7-ம் வீடான துலா ராசி
ஆட்சி பெறுவது சிம்ம ராசி
மூலத்திரிகோணம் பெறுவதும் சிம்ம ராசி
எனவே சிம்மத்திலிருந்து 2, 12, 4, 5, 8, 9-ம் வீடுகள் நட்பு ராசிகளாகும்  சூரியனுக்கு 2ம் வீடாக கன்னி ராசி வருவதால் புதன் முதலில் நட்பாக வருகிறார்.  பின்பு 11ம் வீடாக மிதுனம் வருவதால் அது பகை என வருகிறது.  எனவே ஒரு நட்பும், பகையும் கலந்து வருவதால் சூரியனுக்கு புதன் சமம் என்ற நிலையைப் பெறும்.
எனவே சூரியன் மிதுன, கன்னி ராசிகளில் சமம் என்ற நிலையை அடைகிறார்.
செவ்வாய் உச்சம் பெறும் ராசி மகரம்.  அதன் மூலத்திரிகோண ராசி மேஷம் எனவே சூத்திரத்தின் படி மேஷத்திலிருந்து 10, 11ம் வீடுகளாக வரும் மகரம் மற்றும் கும்ப ராசிகளில் செவ்வாய் பகை பெற வேண்டும்.  ஆனால் மகரம் உச்ச வீடாக வருவதால் மற்றொரு வீடான கும்பம் பகை என்ற நிலை பெறாமல் சமம் என்ற நிலையைப் பெறுகிறது.
இதே முறையில் மற்ற கிரகங்களுக்கும் நட்பு, பகை, சமம் ஆகிய நிலைகளை எளிதாக அறிந்துகொள்ளலாம்.
மூலத்திரிகோண ராசிகள்
சூரியன் – சிம்மம்
சந்திரன் – ரிஷபம்
செவ்வாய் – மேஷம்
புதன் – கன்னி
குரு – தனுசு
சுக்கிரன் – துலாம்
சனி – கும்பம்.
இதில் சூரியன், மற்றும் புதன் தங்களது ஆட்சி வீட்டிலேயே மூலத்திரிகோணம் அடைகின்றன.
சந்திரன் உச்ச வீடான ரிஷபத்தில் மூலத்திரிகோணம் அடைகிறார்.
மற்ற கிரகங்கள் தங்களது இரண்டு வீடுகளில் ஆண் ராசிகளில் மூலத்திரிகோணம் அடைகின்றனர்.
மூலத்திரிகோண நிலை என்பது உச்சம் மற்றும் ஆட்சி நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையாகும்.  இங்கு முக்கால் பங்கு வலிமையுடன் செயல்படும்.
ராகு, கேதுக்களுக்கு பல அபிப்ராய பேதங்கள் இருப்பதால் மூலத்திரிகோண வீடுகளை குறிப்பிடப்படவில்லை.  ஆனால் ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் உச்சமடைகிறார்கள் மற்றும் ராகு விருச்சிகத்தில், கேது ரிஷபத்தில் நீசம் பெறுகின்றனர் என்பதை ஏறக்குறைய பல ஜோதிடர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.  அனுபவத்திலும் சரியாகவே வருகிறது.
அது போலவே கடகம், மகரம் ஆகிய ராசிகளில் ராகு, கேதுக்கள் இருக்கும் போது விஷேஷமான பலன்களை தருகின்றனர்.  கடகத்தில் மூன்று வேதங்களும், மகரத்தில் 1 வேதமும் இருப்பதாகவும் அங்கு பாம்புகள் இருக்கப் பெற்றவர்களுக்கு நல்ல சாஸ்திர ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள் அல்லது உலக வாழ்க்கையில் நல்ல அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்பது விதி.
கிரகங்கள் ராசியிலும் அம்சத்திலும் நல்ல வலிமையுடன் இருப்பது அவசியம்.  ராசியில் வலிமை பெற்று அம்சத்தில் வலிமை குறைந்தால் பலன்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும்.  ராசியில் வலிமை குறைந்து அம்சத்தில் வலிமை பெற்றால் பாதியளவு பலன்களாவது கிடைக்கும்.
எனவே ராசி, அம்சம் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து பலன்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.
தீய ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் வலிமை குறைந்தும், நல்ல ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் வலிமை பெற்றும் இருக்க வேண்டும்.
பகை கிரகங்களின் நட்சத்திர சாரம் பெற்றாலும் தனது ஆதிபத்ய பலன்களை சரிவர கிரகங்கள் அளிப்பதில்லை.

ஜோதிடத்தில் மாந்தியின் சிறப்பு பலாபலன்கள்

ராகு & கேதுவைப்போல மாந்தியும் ஒரு நிழல் கிரகம். மாந்தி 3,6,10 மற்றும் 11 ஆம் வீடுகளில் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மாந்தி அல்லது குளிகன், ஜாதகங்களில் இருக்கும் இடத்தைவைத்துப் பலாபலன்கள்:


1ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர் கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச்
சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள்


2ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால், சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு
இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும்.
சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள். இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில் (Dictionary)மட்டும்தான்.


3ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன். யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக்கூடியவன். உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு நல்ல உறவு இருக்காது. சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின் தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.


4ல் மாந்தி இருந்தால்:

ஒரே வரியில் சொன்னால் – துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor)


5ல் மாந்தி இருந்தால்:

நிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான்.
நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன். அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள்
தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது. சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள்.
பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள்.


6ல் மாந்தி இருந்தால்:

துணிச்சலானவன். உங்கள் மொழியில் சொன்னால் தெனாவெட்டான ஆசாமி. அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes).
மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம்
ஈடுபாடுகொள்வாள் (loved by women)


7ல் மாந்தி இருந்தால்:

வாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை
உடையவன். உங்கள் மொழியில் சொன்னால் தனக்கென்று சில சட்டங்களை வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன். சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே வாழ்க்கையை ஓட்ட நேரிடும்!


8ல் மாந்தி இருந்தால்:

கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக்
கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன். துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்காரன். ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது.


9ல் மாந்தி இருந்தால்:

தன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள் அவனை ‘அம்போ’ அல்லது ’சிவ சம்போ’ என்று கடாசிவிட்டுப் போய் விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும். (deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள். வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும்.


10ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு
இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில் விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட
விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை
உடையவர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள்


11ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம் கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான். சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது . உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப் பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும்.


12ல் மாந்தி இருந்தால்:

ஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும். கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும்.
சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள். சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில் இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.


கூறப்படுள்ளவை அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, சுப கிரகங்களின் அமைப்பு, பார்வை ஆகியவற்றை வைத்து மேற்சொன்ன
பலன்கள் மாறுபடும். கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம்.

சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் ஒரு பார்வை

சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் என்றால், ஏழு கிரகங்களின் சுயவர்க்கப் பரல்களையும் கூட்டி ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும் மொத்தப் பரல்களாகும். அப்படிக் கூட்டிவந்த தொகையை ராசிகளில் எழுதி அதை மொத்தமாகக்கூட்டினால் கிடைப்பதுதான் அந்த 337 என்னும் மந்திர எண்ணாகும் அந்த எண் உலகில் உள்ள அனைவருக்கும் ஒன்று போல இருக்கும். எவருக்கும் அதை விட ஒரு பரல் கூடவோ அல்லது குறையவோ வராது.பாரதப் பிரதமருக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337 தான் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337 தான் அழகான பெண்ணான ஹன்சிகா மோத்வாணிக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337 தான் கைவண்டி இழுத்துப் பிழைப்பை நடத்தும் நல்லுசாமிக்கும் அதே 337தான். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்திக்கும் அதே 337 தான்.

பின் வாழ்க்கை எவ்வாறு வேறு படுகிறது? அதை விரிவாகப் பார்ப்போம்!

சரவாஷ்டக வர்க்கப்பரல்களின் பலன்கள்

மொத்தப் பரல்கள் 337. ராசிகள் 12 வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் வரும்.

ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்று பொருள்.

1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.

2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய வேண்டுமென்றால் அந்த வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.

4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர, திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில் இருந்தாலும் அந்த  வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செய்லபடாது.

5. கிரகங்கள் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அல்லது எதிரி வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு
போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்பட்டு ஜாதகனுக்கு நன்மைகளை செய்வார்கள்!.

6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்ககூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கை போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும்

7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்கு
உரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத் தாமதமாகும். அத்துடன் தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை
மகிழ்ச்சி  நிரம்பியதாக இருக்கும்.

9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவது அவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடைய கணவன் அமைவான்.

10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பதைவிட, தகுதியைவிட (status) குறைவான அமைப்பை உடையே பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.

11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்

12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால் எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு ஜாதகத்தில் உள்ள லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கரமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில் நல்ல வேலை கிடைக்கும்.

13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்
கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம் வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.

14. இரண்டாம் வீட்டில் (House of finance) 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு
மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.

15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் வாழ்க்கையில்  comforts, Luxury எல்லாம் இருக்காது. அதாவது சொத்து
சுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலைமையைப் பொறுத்து, அவர்களுடைய  தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கலாம்.  (சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை)

16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரி அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச் சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்

17. நான்காம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, அன்பான, பரிவான, பாசமுள்ள தாய் அமைவாள்

18. ஒன்பதாம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, நம்மை போற்றி வளர்க்கக்கூடிய, நமக்குப் பெருமை சேர்க்கக்கூடிய தந்தை அமைவார்.

19. ஆறாம் வீட்டில் 32ம் அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, ஆகிய பிரச்சினைகள் இல்லாமல்
இருக்கலாம்

20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள் வராது. பெரிய பிரச்சினைகள் வராது

27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய அதிபதிகள் & தெய்வங்கள்

வ.எண் நட்சத்திரங்கள் நட்சத்திர தெய்வங்கள் அதிபதிகள் அ.தெய்வங்கள் தசா வருடம்
1 அசுவனி ஸ்ரீ சரஸ்வதி தேவி கேது வினாயகர் 7
2 பரணி ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) சுக்கிரன் மகாலக்ஷ்மி 20
3 கார்த்திகை ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) சூரியன் சிவன் 6
4 ரோகினி ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) சந்திரன் சக்தி 10
5 மிருகசீரிஷம் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) செவ்வாய் முருகன் 7
6 திருவாதிரை ஸ்ரீ சிவபெருமான் ராகு காளி, துரக்கை 18
7 புனர்பூசம் ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) குரு தட்சிணாமூர்த்தி 16
8 பூசம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) சனி சாஸ்தா 19
9 ஆயில்யம் ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) புதன் விஷ்ணு 17
10 மகம் ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) கேது வினாயகர் 7
11 பூரம் ஸ்ரீ ஆண்டாள் தேவி சுக்கிரன் மகாலக்ஷ்மி 20
12 உத்திரம் ஸ்ரீ மகாலக்மி தேவி சூரியன் சிவன் 6
13 அஸ்த்தம் ஸ்ரீ காயத்திரி தேவி சந்திரன் சக்தி 10
14 சித்திரை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் செவ்வாய் முருகன் 7
15 சுவாதி ஸ்ரீ நரசிம்மமூர்த்தி ராகு காளி, துரக்கை 18
16 விசாகம் ஸ்ரீ முருகப் பெருமான். குரு தட்சிணாமூர்த்தி 16
17 அனுஷம் ஸ்ரீ லக்மி நாரயணர். சனி சாஸ்தா 19
18 கேட்டை ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) புதன் விஷ்ணு 17
19 மூலம் ஸ்ரீ ஆஞ்சனேயர் கேது வினாயகர் 7
20 பூராடம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) சுக்கிரன் மகாலக்ஷ்மி 20
21 உத்திராடம் ஸ்ரீ வினாயகப் பெருமான். சூரியன் சிவன் 6
22 திருவோணம் ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) சந்திரன் சக்தி 10
23 அவிட்டம் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்) செவ்வாய் முருகன் 7
24 சதயம் ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) ராகு காளி, துரக்கை 18
25 பூரட்டாதி ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) குரு தட்சிணாமூர்த்தி 16
26 உத்திரட்டாதி ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) சனி சாஸ்தா 19
27 ரேவதி ஸ்ரீ அரங்கநாதன் புதன் விஷ்ணு 17

லக்கினங்களின் பொது தகவல்கள்

மேழம் லக்கினம்
மேழம் லக்கினம்

மேழம் லக்கினம்

யோககாரகர்கள்: குரு, சூரியன்

யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி,

குரு தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்குத் தீய பலன்களையே கொடுப்பார். அவர் இந்த லக்கினக்காரர்களுக்கு 12ஆம் இடத்து அதிபதியும் ஆவார். அதை மனதில் கொள்க!சனியுடன் குரு சேரந்தால் அது விதிவிலக்கு. இருவரும் 9, 11ஆம்இடத்திற்கு உரியவர்கள் ஆகவே தீமைகளில் இருந்து விலக்குஅதையும் மனதில் கொள்க!

மாரக அதிபதி: (killer) சுக்கிரன்

விடை லக்கினம்
விடை லக்கினம்

விடை லக்கினம்

யோககாரகர்கள்: சூரியன், சனி

யோகமில்லாதவர்கள்: குரு, சந்திரன்

நல்ல பலன்களைக் கொடுப்பவர்:புதன்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன், சனி ஒன்று சேர்ந்து,கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்.

மாரக அதிபதி: (killer) குரு, சந்திரன்

ஆடவை லக்கினம்
ஆடவை லக்கினம்

ஆடவை லக்கினம்

யோககாரகர்கள்: சுக்கிரன்

யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு

நல்ல பலன்களைக் கொடுப்பவர்: சனி, குரு

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்:சனியுடன் குரு ஒன்று சேர்ந்து,கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்.

மாரக அதிபதி: (killer) சந்திரன், சனி

கடகம் லக்கினம்
கடகம் லக்கினம்

கடகம் லக்கினம்

யோககாரகர்கள்: குரு, செவ்வாய், சந்திரன்

யோகமில்லாதவர்கள்: சுக்கிரன், பதன்

நல்ல பலன்களைக் கொடுப்பவர்:குரு, செவ்வாய், சந்திரன்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: செவ்வாய் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்.

மாரக அதிபதி: (killer) சனி

மடங்கல் லக்கினம்
மடங்கல் லக்கினம்

மடங்கல் லக்கினம்

யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய்

யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி

நல்ல பலன்கள்: சந்திரன் சேர்க்கையை வைத்து நல்ல பலன்களைக் கொடுப்பார்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்: செவ்வாய் லக்கினத்தில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்.

மாரக அதிபதி: (killer) சனி

கன்னி லக்கினம்
கன்னி லக்கினம்

கன்னி லக்கினம்

யோககாரகர்கள்: சுக்கிரன்

யோகமில்லாதவர்கள்: செவ்வாய், சந்திரன், குரு

மாரக அதிபதி: (killer) செவ்வாய்

துலை லக்கினம்
துலை லக்கினம்

துலை லக்கினம்

யோககாரகர்கள்: சனி, புதன்

யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு

நல்ல பலன்களைக் கொடுப்பவர்:சுக்கிரன்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து,கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்.

மாரக அதிபதி: (killer) செவ்வாய்

நளி லக்கினம்
நளி லக்கினம்

நளி லக்கினம்

யோககாரகர்கள்: குரு, சந்திரன்

யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்.

மாரக அதிபதி: (killer) குரு

சிலை லக்கினம்
சிலை லக்கினம்

சிலை லக்கினம்

யோககாரகர்கள்: புதன், செவ்வாய், சூரியன்

யோகமில்லாதவன்: சுக்கிரன்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சூரியனும் ஒன்று சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்.

மாரக அதிபதி: (killer) சனீஷ்வரன்

சுறவம் லக்கினம்
சுறவம் லக்கினம்

சுறவம் லக்கினம்

யோககாரகர்கள்: புதன், சுக்கிரன்

யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்.

மாரக அதிபதி: (killer) செவ்வாய்

கும்பம் லக்கினம்
கும்பம் லக்கினம்

கும்பம் லக்கினம்

யோககாரகர்கள்:சுக்கிரன்

யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்.

மாரக அதிபதி: (killer) குரு, செவ்வாய்

மீனம் லக்கினம்
மீனம் லக்கினம்

மீனம் லக்கினம்

யோககாரகர்கள்: செவ்வாய், குரு

யோகமில்லாதவர்கள்: சனி, சுக்கிரன், சூரியன், புதன்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை

மாரக அதிபதி: (killer) சனி, புதன்

பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள்

ஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது. இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம்.
ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் இருக்கலாம். பாவக சக்கரம் கணிக்க பாவ ஸ்புடங்கள் கணிக்க வேண்டும். இதற்கு லக்கினம் எனப்படும் Ascendant, அதற்கு நேர் எதிரே இருக்கும் Descendant பத்தாம் வீடு எனப்படும் Midheaven அதற்கு நேர் எதிரே இருக்கும் நான்காம் வீடு எனப்படும் Nadir இவற்றை கணிக்க வேண்டும். இதற்கு நிறைந்த கணித அறிவும் table of bhavas மற்றும் ephemeris தேவைப்படும். ஆனால் இதெல்லாம் கணிப்பொறி காலத்திற்கு முன். இப்பொழுது கணிணியில் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இவற்றை உள்ளீடு செய்தால் சில வினாடிகளில் அனைத்து கணக்கீடுகளையும் செய்து கணினி நமக்கு தருகிறது. பல மணி நேரங்களில் செய்ய வேண்டிய கணக்குகள் சில வினாடிகளில் முடிக்கப்படுகிறது! எனவே ராசி சக்கரம் என்பது தோராயமான பாவ சக்கரமாகும்.

லக்கின பாவம் : Lagna (1st house) Houses in Vedic Astrology
உடல்வாகுநிறம்கவர்ந்திடும் அழகுசெல்வம் ( wealth )உடலில் உள்ள இரத்தத்தின் தன்மைஅழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும்புகழ் ( glory )வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும்சுப நிகழ்ச்சிகளையும்அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.
இரண்டாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
தனம்குடும்பம் ( family )நேத்திரம்கல்வி ( education )வாக்குபேசும் திறன் ( ability )கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்)மனம்நடைநவரத்தினங்கள் ( Gems )நிலையான கொள்கைஉணவுமுகம்நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல்பொய்யும் சொல்லுதல்முன்கோபம்கண்களில் வலது கண் ( left eye )வஞ்சக நெஞ்சமாபெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.
மூன்றாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
எதிரியை வெற்றி கொள்ளும் திறமைவேலையாட்கள்இசைஇசையில் ஆர்வம்அதில் தொழில் அமையும் நிலைவீரியம்அதாவது ஆண்மை சக்திதைரியம்எதையும் துணிவுடன் பயமின்றி செயலாற்றுதல்போகம்உடல் உறவில் தணியாத தாகம்இளைய உடன்பிறப்புகள்காதில் ஏற்படும் நோய்காது கேளாத நிலைஆபரணங்கள் அணியும் யோகம்தங்கம்வெள்ளிவயிர ஆபரணங்களை பெறும் யோகம்உணவு அருந்தும் பாத்திரங்கள்மற்றவர்களிடம் பணியாற்றும் நிலைஅதனால் பெறும் நன்மைகள்இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.
நான்காம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
உயர் கல்விவாகனம் வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள்வசிக்கும் வீடுவியாபாரம்தாய் நலம்தாயின் உறவுஉறவினர்களின் நிலைஅவர்களுடன் ஏற்படும் உறவுபுகழ்பெறும் நிலைபுதையல் கிடைக்கும் யோகம்தாயின் ஒழுக்கம்பால் பால் பொருட்கள்பசு பண்ணைதிருதல தரிசனம்சிறுதூர பிரயாணம்அதனால் ஏற்படும் நன்மைஆலோசனை பெரும் வாய்ப்புகனவுகள்மருந்துகள்அதிகாரம் செய்யும் தகுதிஇவைகளையும் பொதுவாக வீட்டை பற்றி சுகத்தை பற்றி தெரிவிக்கும் பாவமாகும்.
ஆம் பாவத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி அதாவது உயர் கல்வி பெறுவதை அறியலாம்.
ஆம் பாவத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து கார்பைக் போன்ற வாகனம்ஆபரணம் பெறும் நிலையை அறியலாம்.
ஆம் பாவத்தையும் செவ்வாயையும் அறிந்து அவர்களின் பலத்தை பொறுத்து அசையாத சொத்துகள் அதாவது வீடுநிலம்தோட்டம்பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.
ஆம் பாவத்தையும் சந்திரனின் பலத்தையும் அறிந்து தாயின் நிலைஆயுள்பாசம் இவற்றை அறியலாம்.
ஆம் பாவத்தையும் குருவின் பலத்தையும் அறிந்து வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகளையும்சுகம் பெறும் நிலையையும் புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.
ஐந்தாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
மாமன்மார்களின் உறவுதந்தை வழி உறவுகள்குழந்தை செல்வம் பூர்வ புண்ணியம்சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம்தமிழ் மொழியில் தேர்ச்சிமந்திரங்களை அறியும் திறமைஉயர் கல்வி பெரும் தகுதிஅறிவாற்றல்அனுபவ அறிவுசொற்பொழிவு செய்யும் திறமைகதாகாலட்சேபம் செய்யும் திறமைபெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதிதாத்தாவின் நிலைமந்திர உபதேசம்இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம்பூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.
குருவையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தை அறியலாம்.
புதனையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதிஆன்மீக சிந்தனை மந்திரங்கள் கற்பதுஉபதேசிப்பதுபிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொலிவாற்றும் தகுதிகதாகலாட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.
ஆறாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
ஒருவருக்கு ஏற்படும் வியாதி – அதனால் ஏற்படும் பாதிப்புபகைவர்களால் ஏற்படும் துன்பம்ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்துகாயங்கள்தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள்சண்டையிடுதல் யுத்தம் செய்தல்வீண் வம்பிற்கு செல்லுதல்திருடர்களால் ஆபத்துபொருட்கள் களவாடப்படுதல்தண்ணீரால் ஆபத்துபெண்களால் உண்டாகும் வீண் வம்புகள்அதனால் அடையும் துன்பம்பாம்புகளால்-விஷத்தால் ஆபத்துசந்தேகம்சோம்பேறித்தனம்ஒருவரை தூசித்தல்பாவமான காரியங்களை செய்தல்நோய்,. சிறைபடுதல்உயர் பதவி பெறுதல்கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்களாகும்.
ஏழாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
திருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியை பற்றியும்பெண்களுக்கு கணவரை பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம்மனைவிகணவன்ஆயுள் சுற்றுப்புற சூழ்நிலைகூட்டு வியாபாரம்திருமணத்தால் ஏற்படும் சுகம்மகிழ்ச்சிசிற்றின்பம்துணி வியாபாரம்அரசாங்கத்தில் ஏற்படும் கவுரவம்பட்டம்பதவிசன்மானம்தறி நெய்தல்பவர் லூம்சிறிய பஞ்சு மில்எந்த பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழில்தரகர் தொழில் இவற்றை குறிக்கும். களத்திர ஸ்தானம் எனப்படும்.
எட்டாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
ஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல்உயர்வான இடத்தில இருந்து விழுவதால் ஏற்படும் ஆபத்துமலை மீள் இருந்து விழுதல்நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம்இடையூறுகள்அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம்நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள்வீண் அலைச்சல்செய்ய தகாத காரியங்களை செய்தல்அதனால் ஏற்படும் துயரம்கருத்து மோதல்கள்அஞ்ஞான வாசம்அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள்மரணம் இவைகளை தெரிவிக்கும் பாவம். இது 10 ஆம் பாவத்திற்கு (ஜீவன பாவம்) 11 ஆம் பாவமாகும் (லாப ஸ்தானம்). இதில் உள்ள கிரகங்களில் தசா புக்தி அந்தரங்களில் தொழில் முறையில் யோகத்தைலாபத்தை தரும்.
ஒன்பதாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
இந்த பாவம் பாக்கிய ஸ்தானம் எனப்படும். சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி 5 ஆம் பாவத்திற்கு 5 ஆம் பாவமே 9 ஆம் பாவம். தான தர்மம் செய்யும் குணம்திருகோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல்அவைகளை புணருத்தாரணம் செய்தல்கும்பாபிஷேகம் செய்த போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் யோகம்ஆன்மீக உணர்வுஅயல்நாடு செல்லும் வாய்ப்புஅங்கு பெறும் பணி,தொழில்கள்அவைகளால் பெறும் லாப-நஷ்டம்நன்றியுணர்வு இவைகளை தெரிவிக்கும் பாவம். தர்மம் என்பது கேட்டு கொடுப்பது தானம் என்பது கேட்காமல் கொடுப்பதுஅறம் என்பதை 32 வகைகளில் செய்யலாம் என கூறியுள்ளார்கள்.
தானத்திலே சிறந்தது அன்னதானமும்கல்வி தானமுமாகும். பசித்தோர்க்கு உணவு கொடுப்பது சிறந்த தானமாகும். ஏழை குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வதும் சிறந்த தொண்டாகும். வசதி படைத்தோர் அவரவர் தகுதிக்கேற்ப தானதர்மம் செய்வதை உணர்த்தும் இடமாகும். மனித நேயமுடையவர்களாஜீவகருண்ய சீலரா என்பதையும் தெரிவிக்கும் இடம்.
பத்தாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
பணியாற்றுதல்தொழிலால் பெறும் லாபம்அதனால் பெறும் புகழ்உயர் பதவிஅரசாங்க கவுரவம்புகழ்பட்டம்பதவிஅரசியலில் ஈடுபாடுஅதில் பெறும் புகழ்அரசாளும் யோகம்தெய்வ வழிபாடுஉணவில் ஏற்படும் ஆர்வம்சுவைசுவையான உணவு கடிக்கும் தகுதிஇரவாபுகழ் பெறும் தகுதி இவைகளை உணர்த்தும் பாவம். தொழில் ஸ்தானம்கர்ம ஸ்தானம்ஜீவன ஸ்தானம் எனப்படும்.
பதினோராம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும்சேவை செய்யும் நிலைஇளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்)செய் தொழில்தொழிலி கிடைக்கும் லாபம்பயிர் தொழில்குதிரையானை இவைகளை வளர்த்தல்பராமரித்தல்கால்நடை வளர்ப்புஅறிவாற்றல்மன அமைதி பெறுதல்நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள்மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள்லாபங்கள்உதவிகள்வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும். துன்பங்கள்துயர்கள் தீர்ந்திடும் நிலை ஆடை இவைகளையும் குறிக்கும்.
பன்னிரெண்டாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
அந்நிய நாட்டில் அமையும் தொழில்உத்தியோகம்செலவினங்கள்செலவு செய்வதால் ஏற்படும் சுகம்சயன சுகம்விவசாயம்தியாக மனப்பான்மையாகம் செய்தல்மறுமையில் கிடைக்கும் பேறுமனைவி அல்லது கணவர் அமையும் இடம்அனவசிய செலவுகள்சிறைபடுதல்நிம்மதியான தூக்கம்தூக்கமின்மைஇல்லற சுகம்பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும். மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும். ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்.

பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகாரங்கள்

ஜாதகத்தில் நாம் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறோமோ அதுதான் உயிர் ஸ்தானம்..நம் குணத்தை செய்ல்பாடுகளை ,தன்னம்பிக்கையை,செயல்பாட்டை குறிக்கும் இடம் லக்னம்..ஒவ்வொரு லக்னமும் ஒரு பஞ்ச பூத தன்மையை குறிக்கும்.

நம் லக்னம் கெட்டால் நம் வாழ்வில் பல வெற்றிகளை தடுத்து தோல்விகளையே தருகிறது..தாழ்வு மனப்பான்மை அதிகரித்துவிடுகிறது ..கிணற்று தவளை போல பலர் தங்கள் வாழ்வை சுருக்கி கொள்வதற்கு லக்னம் வலிமை இழப்பது ஒரு முக்கிய காரணம் ஆகும்…லக்னம் வலுவடைந்தவர் சமூகத்தில் அந்தஸ்து அடைகிறார்..லக்ன யோகர்கள் பலம் அடைவோர் மாவட்ட அளவில் புகழ் அடைவார்..லக்ன கேந்திராதிபதிகள் பலம் அடைவோர் பல ஆயிரக்கணக்கான மக்களிடம் புகழ் அடைகிறார்…நல்ல திசாபுத்திகள் நடந்தால் இன்னும் உன்னதமான பலன்களை அடைகிறார்..
லக்னாதிபதி லக்னத்துக்கோ சந்திரனுக்கோ 6,8,12ல் மறைந்து போனால் ,அல்லது நீசம்,வக்ரம்,அஸ்தமனம் ,பகை கிரகங்களுடன் சேர்தல்,பகை வீடுகளில் இருந்தால் என்ன பரிகாரம் என பார்ப்போம்.
12 ராசிகள் நீர், நிலம், நெருப்பு காற்று என்ற அடிப்படையில் நான்கு வகையாக நம் முன்னோர் பிரித்திருக்கின்றனர்..

நீர் ராசிகள் :- கடகம் , விருச்சிகம் , மீனம்
காற்று ராசிகள் :- மிதுனம், துலாம், கும்பம்
நிலம் ராசிகள் :- ரிஷபம், கன்னி,மகரம்
நெருப்பு ராசிகள் :- மேஷம், சிம்மம்,தனுசு

மேற்க்கண்ட ராசிகளில் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்துக்குண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோசம் நிவர்த்தியாகும்…

பஞ்சபூத ஸ்தலங்கள்;

மண் -காஞ்சிபுரம்
நீர்-திருவானைக்காவல்
நெருப்பு-திருவண்ணாமலை
காற்று -ஸ்ரீகாளஹஸ்தி
ஆகாயம் -சிதம்பரம்

உங்கள் லக்னம் மிதுனம் என்றால் மிதுனம் காற்று ராசி ..எனவே அதர்குறிய ஸ்ரீகாளஹஸ்தி சென்று உங்கள் பிறந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

விதி,கதி,மதி என சொல்லப்படும் லக்கினம்,சூரியன்,சந்திரன் எது பலமாக இருக்கிரதோ அது எந்த ராசியை குறிக்கிறதோ அதற்குறிய கோயிலும் சென்று வரலாம்..சனி எந்த ராசியில் இருக்கிறதோ அதற்குறிய வழிபாட்டை செய்தால் தொழில் நன்றாக இருக்கும்…என்ன திசை இப்போது நடக்கிறதோ அந்த திசாநாதன் இருக்கும் ராசி மற்றும் அதன் அதிபதி எந்த ராசியில் இருக்கிறதோ அந்த கோயில் சென்றாலும் சிறப்பு. பஞ்சபூத கோயில்கள் பின்னால் இருக்கும் சூட்சுமமும் இதுதான்.

எந்த திதியில் என்ன செய்யலாம் ?


  திதி அதிபதி செய்ய தக்க கார்யம்
1 பிரதம அக்னி பகவான் உலோகம்,மரம் இவைகளில் சிற்ப வேலைகள், பாய் முடைதல் படுக்கைக்கு, சித்திர வேலை செய்தல் போன்றதும், ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்.
2 துதியை துவஷ்டா தேவதை விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது.
3 திருதியை பார்வதி வீடு கட்டுதல், கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்த திதி ஆகும்.
4 சதுர்த்தி கஜநாதன் [விநாயகர்] வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்கார்யம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும்.[சங்கடகர சதுர்த்தி இதற்க்கு விதி விலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்க்கு விதி விலக்கு]
5 பஞ்சமி சர்ப்பம் இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்க்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம்.
6 சஷ்டி முருகன் வேலைக்கு சேர,பசுமாடு வாங்க,வீடு வாங்க, வாகனம் வாங்க , மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொதுகணக்கு.
7 சப்தமி சூரியன் வீடுகட்ட,உபநயனம், விவாஹம்,தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்றம், விவசாயம், துவிதியை,திருதியை பஞ்சமி திதியில் சொல்ல பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர்கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி.
8 அஷ்டமி சிவபெருமான் யுத்தம், தான்யம்,வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது.
9 நவமி பாராசக்தி பகைவரை சிறைபிடிக்க, பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க அதிக தோசம் உள்ள திதி அல்ல இது.
10 தசமி ஆதிசேஷன் தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகு கேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி , மங்களகரமான கார்யம், ஜலம், முக்கியஸ்தரை சந்திக்க உகந்தது இந்த திதி .
11 ஏகாதசி தர்ம தேவதை பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம்,விவசாயம்,ஆபரணம்,வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்.
12 துவாதசி விஷ்ணு விருந்துண்ண, தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள்,தர்மகார்யம்,நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம். [ திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது ]
13 திரயோதசி மன்மதன் வ்குகாலம் நிலைக்கும் அனைத்தும், செளபாக்கியமான மங்களகரமான கார்யம் ,நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி & நீண்டகால திருமண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்.
14 சதுர்தசி கலிபுருஷன் வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்! தேய்பிறையில் சிவ பெருமானை வணங்கி வர வேண்டும்! பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை மற்றும் சுக்கில பட்ஷம் எனும் வளர்பிறையில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகார்யம் தவிர்க்க. [ அமாவாஸைக்கு முதல் நாளில் ]
15 அமாவாஸை பெளர்ணமி காளி அமாவாஸையில் முன்னோர்மற்றும் இறந்தவர்களுக்கு உண்டான கார்யம் மட்டும் செய்யவும்! பெளர்ணமியில் செய்ய தக்கவை கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும் ,யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும் மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.