Avatar

pranava

மகாசிவராத்திரி மகிமைகள்!

சிவராத்திரி :

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசி திதி சிவராத்திரி.

மகாசிவராத்திரி:

மாசி மாத சதுர்த்தசி திதியினை நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இது வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் வரும் சிவராத்திரி.
இந்த ஆண்டு 13-02-2018 செவ்வாய் கிழமை வருகின்றது. எண்ணிய எல்லாம் நிறைவேற ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றி பணியும் நேரமும் அதுவே..!  அப்படி பணிந்து பேரு பெற்றவர்களில் சிலர்.

*அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து பற்றற்ற நிலையில் இருக்கும் எம் பெருமான் அர்த்தனாதீஸ்வரராக ஆனது,..!

*அர்ஜூனன் அவர்கள் தவத்தால் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்றது,.!

*கண்ணப்ப நாயனார் என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது.!

*பகீரதன் தவப்பலன் கங்கையை பாரிக்கு தந்தது..!

*என்றும் பதினாறு வயதுடையோன் மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது..!

இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.

மகா சிவராத்திரி அன்று அப்பன் ஈசனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும்.  ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அபிஷேகம்கள் ,அர்ச்சனைகள் , ஆராதனைகள் செய்யப்படும்.!

ஒவ்வொரு ஜாமத்திலும் செய்யப்படும் அபிஷேகம்கள், அர்ச்சனைகள்..ஆராதனைகள் ..!

#முதல்_கால பூஜை : 6pm -9pm

இது ஜோதி சொரூபமான ஈசனின் முடி ( தலை பகுதி ) தேடி அன்னப்பறவையாய் மாறிய அய்யன் பிரம்மன் எம்பெருமான் ஈசனுக்கு செய்யும் பூஜையாகும்..!

அன்னைக்களுக்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் பசு என்னும் கோமாதா . மும்மூர்த்திகள் முதல் முப்பது முக்கோடி தேவர்களும் ரிஷிகள் யாவரும் உறையும் கோமாதா எனும் பசுவின் மூலம் பெறப்படும் அமுதுகளால் செய்யப்படும் பூஜை இதுவே .

இந்த கால பூஜையில்
*”பஞ்ச கவ்வியத்தால்” (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து,
*சந்தனம் பூச்சு,
*மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும்,
*வில்வம் அலங்காரமும் ,
*தாமரைப் பூவால் அர்ச்சனையும் செய்து,
*பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து,
*ரிக்வேதம் ,சிவபுராணம் பாராயணம் செய்து
*நெய் தீபத்துடன் முதல் கால பூஜை நடத்தப்படும்..!

பிறவி பிணி நீங்க இக்காலம் பெரிதும் உதவும் .!

#இரண்டாவது_கால பூஜை : 9pm -12pm

திருவடி தேடி சென்ற பரம்பொருள் “விஷ்ணு” அவர்களால் எம்பெருமான் ஈசனுக்கு செய்யும் பூஜையாகும்..!

இந்த காலத்தில்
*பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும்,
*பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல்,
*வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும்,
*வில்வம் ,தாமரைப் பூவால் அலங்காரம், *துளசி அர்ச்சனைகள் செய்தும்,
*இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து,
*யஜூர் வேதம் ,8ம் திருமுறையில் கீர்த்தி திருவகவல் பாராயணம் செய்து
*நல்லெண்ணை தீபத்துடன் பூஜை நடைபெறும்..!

இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நோய்கள் தீரும் ; செல்வம் செழித்தோங்கும், திருமாலின் அருள் கிட்டும்…

#மூன்றாவது_கால பூஜை : 12am-3am

அம்பாள் அவர்கள் அப்பன் ஈசனுக்கு செய்யும் பூசையினை மூன்றாம் கால பூஜை என்போம் .

இந்த காலத்தில்
*தேன் அபிஷேகம் செய்தும்
*பச்சை கற்பூரம் மற்றும் மல்லிகை ,
வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும்,
*சிவப்பு வஸ்திரம் அணிவித்தும்,
*வில்வ இலை கொண்டு அர்ச்சனைகள் செய்து
*எள் அன்னம் நிவேதனமாக படைத்து,
*சாமவேதம் ,8ம் திருமுறையில் திருவண்டகப்பகுதி பாராயணம் செய்து
*நெய் தீபத்துடன் பூஜை நடைபெறும் .!

இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம்என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்..!

#நான்காவது_கால பூஜை : 3am-6am

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.

இந்த காலத்தில் ,
*குங்குமப்பூ சாற்றி ,கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும்,
*பச்சை அல்லது நீல வண்ண வஸ்திரம் அணிவித்தும்,
*நந்தியாவட்டை பூவால் அலங்காரமும்,
*அல்லி, நீலோற்பவம் மலர்களால்
அர்ச்சனையும் செய்து
*சுத்தன்னம் நிவேதனம் படைத்து,
*அதர்வண வேதம்,8ம் திருமுறையில் போற்றித் திருவகவல் பாராயணம் செய்து
தூப தீப ஆராதனைகளுடன் பூஜை நடைபெறும் .!
18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது…!

*ஏக வில்வம் சிவார்ப்பணம் !!!
*********
மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம்.
இந்த இரண்டையும் விலக்கி, சிவபெருமானுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்…!

உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும்.
அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்…!

சிவபெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர்,
ஏகாந்தம்; ஏகாந்தம்; ஏகாந்தம். முற்றிலும் அமைதி..!
இவர் விரும்புவது அமைதி..!

மகா சிவராத்திரி அன்று திருமறைகளையும் ஓதலாம்…!!
சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, சிவ ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம்.

சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

சிவராத்திரியன்று
மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு, உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள், பணியில் உள்ளவர்கள் பணி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தாலே போதுமானது.

மனதில் சொல்லவேண்டிய மந்திரம்

முக்திநிலைஅளிக்கும் ஆருத்ரா தரிசனம்

மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலத்தை தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம்.

இந்நாளிலேயே இறைவன் நடராஜப்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். அது மட்டுமின்றி இதே நாளில் தான், (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார். இதே நாளில் தான் ஈசன் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கும் தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.

இந்நாளிலேயே பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி இதனைக் கடைபிடிக்கின்றனர். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) இருபத்திஏழு நட்சத்திரங்களில் ‘‘திரு’’ என்ற அடைமொழியுடன் உள்ள நட்சத்திரங்கள் இரண்டு. அவை #திருவாதிரை, #திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் ஆகும்.

திருவாதிரை தில்லை நடராஜப்பெருமானுக்கு உகந்தது. திருவோணம் பெருமாளுக்கு பிடித்தமானது. (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) சிவபெருமானுக்கு உரிய ஆயிரம் நாமங்களில் ஆதிரையான் என்ற ஒரு பெயரும் உண்டு. “ஆருத்ரா” என்ற வடமொழிப் பெயர் தமிழில் ஆதிரை என்று திரிந்து “திருவாதிரை” ஆயிற்று.

திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி நாளில், உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன் திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்தாவது நாளில் இறுதி நாளாக திருவாதிரை அமைகிறது. (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) சிவபெருமானுக்கு இது மிகவும் உகந்த நட்சத்திரம் என்பதால், அவரை ஆதிரையின் முதல்வன் என்று அழைக்கின்றனர். பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாய ஷேத்ரமாக விளங்குகிறது.

தில்லைக்கோவிலில் சிவபெருமான் திருக்கோலம் காண்பதற்கு இனியது. உடுக்கையில் அன்பருக்கு ஆறுதல் அளித்து, காத்தலை அபய திருக்கரத்தாலும், துஷ்ட சம்காரத்தை மற்றொரு திருக்கரத்தில் தாங்கிய அக்னியாலும், (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) மறைத்தலை ஊன்றிய திருவடித் தாமரைகளாலும், பேரருளை தூக்கிய தண்டை சிலம்பணிந்த சேவடிக்கமலத்தாலும் காட்சி தந்து அருளாசி புரிகிறார்.

“குனித்த புருவமும், கொவ்வை செவ்வாயும், குமின் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும், இனித்த முடனே எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்று நடராஜப்பெருமானின் திருக்கோலத்தை அப்பர் பெருமான் பக்தி பரவசத்துடன் பாடுகிறார்.

தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில் விட மேறிய பூம்பாவையை உயிர்பிக்கப் பாடிய பதிகத்தில் ஆதிரை நாள் காணாது போதியோ பூம்பாவாய் என்றும் குறிப்பிடுகிறார். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) இதன் மூலம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே திருவாதிரை விரதம் இருந்து பக்தர்கள் அனுஷ்டித்து வந்துள்ளனர் என்று தெரிகிறது.

#ஆருத்ரா #தரிசனத்தின் #வரலாறு: புராண காலத்தில் பாற்கடலில் திருமால் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த போது, திடீரென்று இறைவனின் பாரம் அதிகமாயிற்று. அதனை உணர்ந்த சேஷன் பகவானிடம், நாராயணா!! திடீரென்று தங்கள் உடல் பாரம் அதிகமாகக் காரணம் என்ன என்று வினவினார். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) அதற்கு இறைவன், “ஆதிசேஷா!! நான் ஈசனின் திருதாண்டவ அழகை நினைத்துப் பார்த்தேன். அந்தப் பூரிப்பின் காரணமாகத் தான் எனது உடல் பாரம் அதிகமாயிற்று என்று கூறி அந்த அழகை அவரிடம் வர்ணித்தார் திருமால்.

இதனைக் கேட்டு மகிழ்ந்த ஆதிசேஷன், கேட்கும் போதே இவ்வளவு பேரானந்தமாக இருக்கும் இந்த அழகை நேரில் காண விரும்பி அதற்கான மார்க்கத்தை உரைக்கும்படி திருமாலிடம் வேண்டினார். அதற்கு அவர் ஆதிசேஷனை பூலோகத்திற்கு சென்று தில்லையில் தவம் புரிந்தால் அவனுக்கும் அது சித்தியாகும் என்றார். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) அதன்படி, ஆதிசேஷன் பூலோகத்தில் ஒரு ரிஷி தம்பதியருக்கு மகனாகப் பிறந்து, வளர்ந்து உரிய பருவத்தில் தில்லையில் தவம் இயற்றத் தொடங்கினார். அவரோடு வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவரும் இறைவனின் திருத்தாண்டவ தரிசனம் வேண்டி அவரோடு சேர்ந்து தவம் செய்தார்.

இருவருக்கும் அருள்புரிய எண்ணிய ஈசன் திருவாதிரை நன்னாளில் அவர்களுக்கு தரிசனம் அளித்து, தாண்டவம் ஆடி மகிழ்ந்து, அனைவரையும் மகிழச் செய்தார்.

ஆருத்ரா தரிசனம் தொடர்பாக இன்னொரு கதையும் கூறப்படுகிறது. தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிட்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) முனிபத்தினிகள் தம்மை மறந்து பிட்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர்.

சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) இதுவே ஆருத்ரா தரிசனம் என்றும் சொல்லப்படுகின்றது.

#களி: “திருவாதிரைக்கு ஒருவாய்க்களி” என்பது பழமொழி. எனவே தான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி உண்டு மகிழ்கின்றனர். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) புராணங்கள் திருவாதிரை விரதம் இருப்பவர்கள் களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசித்து வருவது சிறப்பு என்கின்றன. இந்த களி படைக்கப்பட்டதற்கும் ஒரு கதை உள்ளது.

சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் சேந்தனார் என்றொரு விறகுவெட்டி வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) ஒருநாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி, நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார்.

சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார்.

கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) அப்போது அசரீரியாக “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

சேந்தனார் இறைவன் அருளால் “மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல” என்று தொடங்கி “பல்லாண்டு கூறுதுமே” என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களி படைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.

#திருவாதிரை #விரதம் #இருக்கும் #முறை: மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூச வேண்டும். சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்களின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது . (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) இந்த ஐந்துக்கும் உரிய இடங்களாக ஐந்து திருத்தலங்களானது சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்) ஆகியவை. இதில் முதன்மையான ஆலயத்தில் சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர்.

“ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!”

வருகின்ற 24 12 2017 வரும் சஷ்டி சிறப்பு

வருகின்ற 24 12 2017 வரும் சஷ்டி மிகவும் நல்லது அன்று முருகன் கோவில் பிரகாரம் 36 முறை வலம் வருவது சிறப்பு வாய்ந்த நாளாக தல புராணத்தில் குறிப்பிட்டுள்ளது இதன் நன்மை 4448 வியாதிகள் நீங்கும் நோய் தொல்லை எதிரி தொல்லை கடன் தொல்லை மற்றும் சாபம் பாபம் தோக்ஷம் நீங்கும் மற்றும் கர்ம வினை ஊழ்வினை நீங்கும் சந்ததி விருத்தி உண்டு.
இந்த விசேசம் பிரம்ம தீர்த்த சிறப்பு
1 சுக்கில பட்க்ஷம்
2 மார்கழி மாதம்
3 ஞாயிறு
4 சக்ஷ்டி திதி
5 சதய நட்சத்திரம்
இந்த 5 ம் பஞ்சாங்கத்தில் வருகிறது  நேரம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

மங்களவார விரதம்

நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள் முழுவதும் செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டித்தல்.

தெய்வம் : பைரவர், வீரபத்திரர்.

விரதமுறை : பகலில் ஒருபொழுது சாப்பிடலாம்.

பலன் : பயணத்தின் போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்.

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்றால் என்ன?

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா?

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது. இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும்( ஊர்த்துவமுக ) நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள்.

இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள், ( அதோமுக ) நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள்.

இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடிகளைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பதும் ( த்ரியக்முக ) நட்சத்திரங்கள், அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், சமநோக்கு நாட்கள்.

இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.

*நீங்களே இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று வார்த்தையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு முறையில் இருக்கும்.

பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள்

ஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது. இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம்.
ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் இருக்கலாம். பாவக சக்கரம் கணிக்க பாவ ஸ்புடங்கள் கணிக்க வேண்டும். இதற்கு லக்கினம் எனப்படும் Ascendant, அதற்கு நேர் எதிரே இருக்கும் Descendant பத்தாம் வீடு எனப்படும் Midheaven அதற்கு நேர் எதிரே இருக்கும் நான்காம் வீடு எனப்படும் Nadir இவற்றை கணிக்க வேண்டும். இதற்கு நிறைந்த கணித அறிவும் table of bhavas மற்றும் ephemeris தேவைப்படும். ஆனால் இதெல்லாம் கணிப்பொறி காலத்திற்கு முன். இப்பொழுது கணிணியில் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இவற்றை உள்ளீடு செய்தால் சில வினாடிகளில் அனைத்து கணக்கீடுகளையும் செய்து கணினி நமக்கு தருகிறது. பல மணி நேரங்களில் செய்ய வேண்டிய கணக்குகள் சில வினாடிகளில் முடிக்கப்படுகிறது! எனவே ராசி சக்கரம் என்பது தோராயமான பாவ சக்கரமாகும்.

லக்கின பாவம் : Lagna (1st house) Houses in Vedic Astrology
உடல்வாகுநிறம்கவர்ந்திடும் அழகுசெல்வம் ( wealth )உடலில் உள்ள இரத்தத்தின் தன்மைஅழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும்புகழ் ( glory )வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும்சுப நிகழ்ச்சிகளையும்அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.
இரண்டாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
தனம்குடும்பம் ( family )நேத்திரம்கல்வி ( education )வாக்குபேசும் திறன் ( ability )கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்)மனம்நடைநவரத்தினங்கள் ( Gems )நிலையான கொள்கைஉணவுமுகம்நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல்பொய்யும் சொல்லுதல்முன்கோபம்கண்களில் வலது கண் ( left eye )வஞ்சக நெஞ்சமாபெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.
மூன்றாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
எதிரியை வெற்றி கொள்ளும் திறமைவேலையாட்கள்இசைஇசையில் ஆர்வம்அதில் தொழில் அமையும் நிலைவீரியம்அதாவது ஆண்மை சக்திதைரியம்எதையும் துணிவுடன் பயமின்றி செயலாற்றுதல்போகம்உடல் உறவில் தணியாத தாகம்இளைய உடன்பிறப்புகள்காதில் ஏற்படும் நோய்காது கேளாத நிலைஆபரணங்கள் அணியும் யோகம்தங்கம்வெள்ளிவயிர ஆபரணங்களை பெறும் யோகம்உணவு அருந்தும் பாத்திரங்கள்மற்றவர்களிடம் பணியாற்றும் நிலைஅதனால் பெறும் நன்மைகள்இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.
நான்காம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
உயர் கல்விவாகனம் வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள்வசிக்கும் வீடுவியாபாரம்தாய் நலம்தாயின் உறவுஉறவினர்களின் நிலைஅவர்களுடன் ஏற்படும் உறவுபுகழ்பெறும் நிலைபுதையல் கிடைக்கும் யோகம்தாயின் ஒழுக்கம்பால் பால் பொருட்கள்பசு பண்ணைதிருதல தரிசனம்சிறுதூர பிரயாணம்அதனால் ஏற்படும் நன்மைஆலோசனை பெரும் வாய்ப்புகனவுகள்மருந்துகள்அதிகாரம் செய்யும் தகுதிஇவைகளையும் பொதுவாக வீட்டை பற்றி சுகத்தை பற்றி தெரிவிக்கும் பாவமாகும்.
ஆம் பாவத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி அதாவது உயர் கல்வி பெறுவதை அறியலாம்.
ஆம் பாவத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து கார்பைக் போன்ற வாகனம்ஆபரணம் பெறும் நிலையை அறியலாம்.
ஆம் பாவத்தையும் செவ்வாயையும் அறிந்து அவர்களின் பலத்தை பொறுத்து அசையாத சொத்துகள் அதாவது வீடுநிலம்தோட்டம்பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.
ஆம் பாவத்தையும் சந்திரனின் பலத்தையும் அறிந்து தாயின் நிலைஆயுள்பாசம் இவற்றை அறியலாம்.
ஆம் பாவத்தையும் குருவின் பலத்தையும் அறிந்து வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகளையும்சுகம் பெறும் நிலையையும் புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.
ஐந்தாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
மாமன்மார்களின் உறவுதந்தை வழி உறவுகள்குழந்தை செல்வம் பூர்வ புண்ணியம்சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம்தமிழ் மொழியில் தேர்ச்சிமந்திரங்களை அறியும் திறமைஉயர் கல்வி பெரும் தகுதிஅறிவாற்றல்அனுபவ அறிவுசொற்பொழிவு செய்யும் திறமைகதாகாலட்சேபம் செய்யும் திறமைபெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதிதாத்தாவின் நிலைமந்திர உபதேசம்இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம்பூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.
குருவையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தை அறியலாம்.
புதனையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதிஆன்மீக சிந்தனை மந்திரங்கள் கற்பதுஉபதேசிப்பதுபிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொலிவாற்றும் தகுதிகதாகலாட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.
ஆறாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
ஒருவருக்கு ஏற்படும் வியாதி – அதனால் ஏற்படும் பாதிப்புபகைவர்களால் ஏற்படும் துன்பம்ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்துகாயங்கள்தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள்சண்டையிடுதல் யுத்தம் செய்தல்வீண் வம்பிற்கு செல்லுதல்திருடர்களால் ஆபத்துபொருட்கள் களவாடப்படுதல்தண்ணீரால் ஆபத்துபெண்களால் உண்டாகும் வீண் வம்புகள்அதனால் அடையும் துன்பம்பாம்புகளால்-விஷத்தால் ஆபத்துசந்தேகம்சோம்பேறித்தனம்ஒருவரை தூசித்தல்பாவமான காரியங்களை செய்தல்நோய்,. சிறைபடுதல்உயர் பதவி பெறுதல்கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்களாகும்.
ஏழாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
திருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியை பற்றியும்பெண்களுக்கு கணவரை பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம்மனைவிகணவன்ஆயுள் சுற்றுப்புற சூழ்நிலைகூட்டு வியாபாரம்திருமணத்தால் ஏற்படும் சுகம்மகிழ்ச்சிசிற்றின்பம்துணி வியாபாரம்அரசாங்கத்தில் ஏற்படும் கவுரவம்பட்டம்பதவிசன்மானம்தறி நெய்தல்பவர் லூம்சிறிய பஞ்சு மில்எந்த பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழில்தரகர் தொழில் இவற்றை குறிக்கும். களத்திர ஸ்தானம் எனப்படும்.
எட்டாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
ஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல்உயர்வான இடத்தில இருந்து விழுவதால் ஏற்படும் ஆபத்துமலை மீள் இருந்து விழுதல்நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம்இடையூறுகள்அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம்நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள்வீண் அலைச்சல்செய்ய தகாத காரியங்களை செய்தல்அதனால் ஏற்படும் துயரம்கருத்து மோதல்கள்அஞ்ஞான வாசம்அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள்மரணம் இவைகளை தெரிவிக்கும் பாவம். இது 10 ஆம் பாவத்திற்கு (ஜீவன பாவம்) 11 ஆம் பாவமாகும் (லாப ஸ்தானம்). இதில் உள்ள கிரகங்களில் தசா புக்தி அந்தரங்களில் தொழில் முறையில் யோகத்தைலாபத்தை தரும்.
ஒன்பதாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
இந்த பாவம் பாக்கிய ஸ்தானம் எனப்படும். சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி 5 ஆம் பாவத்திற்கு 5 ஆம் பாவமே 9 ஆம் பாவம். தான தர்மம் செய்யும் குணம்திருகோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல்அவைகளை புணருத்தாரணம் செய்தல்கும்பாபிஷேகம் செய்த போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் யோகம்ஆன்மீக உணர்வுஅயல்நாடு செல்லும் வாய்ப்புஅங்கு பெறும் பணி,தொழில்கள்அவைகளால் பெறும் லாப-நஷ்டம்நன்றியுணர்வு இவைகளை தெரிவிக்கும் பாவம். தர்மம் என்பது கேட்டு கொடுப்பது தானம் என்பது கேட்காமல் கொடுப்பதுஅறம் என்பதை 32 வகைகளில் செய்யலாம் என கூறியுள்ளார்கள்.
தானத்திலே சிறந்தது அன்னதானமும்கல்வி தானமுமாகும். பசித்தோர்க்கு உணவு கொடுப்பது சிறந்த தானமாகும். ஏழை குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வதும் சிறந்த தொண்டாகும். வசதி படைத்தோர் அவரவர் தகுதிக்கேற்ப தானதர்மம் செய்வதை உணர்த்தும் இடமாகும். மனித நேயமுடையவர்களாஜீவகருண்ய சீலரா என்பதையும் தெரிவிக்கும் இடம்.
பத்தாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
பணியாற்றுதல்தொழிலால் பெறும் லாபம்அதனால் பெறும் புகழ்உயர் பதவிஅரசாங்க கவுரவம்புகழ்பட்டம்பதவிஅரசியலில் ஈடுபாடுஅதில் பெறும் புகழ்அரசாளும் யோகம்தெய்வ வழிபாடுஉணவில் ஏற்படும் ஆர்வம்சுவைசுவையான உணவு கடிக்கும் தகுதிஇரவாபுகழ் பெறும் தகுதி இவைகளை உணர்த்தும் பாவம். தொழில் ஸ்தானம்கர்ம ஸ்தானம்ஜீவன ஸ்தானம் எனப்படும்.
பதினோராம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும்சேவை செய்யும் நிலைஇளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்)செய் தொழில்தொழிலி கிடைக்கும் லாபம்பயிர் தொழில்குதிரையானை இவைகளை வளர்த்தல்பராமரித்தல்கால்நடை வளர்ப்புஅறிவாற்றல்மன அமைதி பெறுதல்நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள்மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள்லாபங்கள்உதவிகள்வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும். துன்பங்கள்துயர்கள் தீர்ந்திடும் நிலை ஆடை இவைகளையும் குறிக்கும்.
பன்னிரெண்டாம் பாவம் : Second house (2nd house) Houses in Vedic Astrology
அந்நிய நாட்டில் அமையும் தொழில்உத்தியோகம்செலவினங்கள்செலவு செய்வதால் ஏற்படும் சுகம்சயன சுகம்விவசாயம்தியாக மனப்பான்மையாகம் செய்தல்மறுமையில் கிடைக்கும் பேறுமனைவி அல்லது கணவர் அமையும் இடம்அனவசிய செலவுகள்சிறைபடுதல்நிம்மதியான தூக்கம்தூக்கமின்மைஇல்லற சுகம்பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும். மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும். ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்.